வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வரும் 19ம் தேதி அனைத்து கட்சி கூட்டத் துக்கு, மாநில தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்து இருப்பதால், 21ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப் படுகிறது.
![]()
|
தமிழகத்தில் 2016ல் நடக்க வேண்டிய உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. முதலில் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடுக்காக தொடுக்கப்பட்ட வழக்கின் காரணமாக, சில மாதங்கள் தேர்தல் தள்ளிப் போனது. உச்ச நீதிமன்ற உத்தரவுஅதன்பின், வெவ்வேறு காரணங்களை காட்டி, தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. இதனால், மத்திய அரசிடமிருந்து உள்ளாட்சிகளுக்கு கிடைக்க வேண்டிய நிதியும் தடைபட்டது.
கடந்த 2019 டிசம்பரில், ஊரக உள்ளாட்சி தேர்தல் மட்டும் நடத்தப்பட்டது. அதிலும் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு, கடந்த அக்டோபரில் தேர்தல் நடந்தது. ஆனால், 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை. நான்கு மாதங்களுக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டுமென்று, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது. ஜனவரி இறுதிக்குள் தேர்தல் நடத்தப்பட்டுஇருக்க வேண்டும்.
இது தொடர்பாக, வரும் 27ம் தேதியன்று, உச்ச நீதிமன் றத்தில் தமிழக அரசின் சார்பில் பதில் தர வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்கிடையில், சென்னை மாநகராட்சியில், அ.தி.மு.க., ஆட்சியின் போது, மண்டல வாரியாக பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிட்டதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கூட்டத்துக்கு அழைப்புமனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அந்த அரசாணையை ரத்து செய்து 100 வார்டுகளை மட்டும் ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டது.
![]()
|
இந்த வழக்கு உட்பட வேறு எந்த சட்டரீதியான தடைகளும் இல்லாத நிலையில், மாநில தேர்தல் ஆணையம், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்துள்ளது. வரும் 19ம் தேதி, அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டம் முடிந்த பின், வரும் 27ம் தேதிக்குள் எந்த நாளிலும் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் வாய்ப்புள்ளது.
மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் தரப்பில் விசாரித்த போது, 'வரும் 27ம் தேதிக்குள் தேர்தலை நடத்த இயலாவிட்டாலும், தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு விட்டால், அதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும். 'இல்லாவிடில், மாநில தேர்தல் ஆணையம் கடும் கண்டனத்துக்கு உள்ளாக வேண்டியிருக்கும். பிப்., மூன்றாம் வாரத்துக்குள் தேர்தலை நடத்தும் வகையில், 21ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது' என்றனர்.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE