அரசு விரைவு பஸ்கள் வாயிலாக ரூ.6.50 கோடி வசூல்

Updated : ஜன 17, 2022 | Added : ஜன 17, 2022 | கருத்துகள் (4)
Advertisement
பொங்கல் பண்டிகை விடுமுறையால், மூன்று நாளில், அரசு விரைவு போக்குவரத்து பஸ்கள் வாயிலாக, 6.50 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைத்து உள்ளது. அரசு விரைவு போக்குவரத்து கழகங்கள் சார்பில், 1,150 பஸ்கள், தமிழகம், அண்டை மாநிலங்களுக்கு இயக்கப்படுகின்றன. இவற்றின் வாயிலாக தினமும், 1.30 கோடி, வார விடுமுறை நாளில், 1.80 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பொங்கல் பண்டிகை விடுமுறையால், மூன்று நாளில், அரசு விரைவு போக்குவரத்து பஸ்கள் வாயிலாக, 6.50 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைத்து உள்ளது.



latest tamil news



அரசு விரைவு போக்குவரத்து கழகங்கள் சார்பில், 1,150 பஸ்கள், தமிழகம், அண்டை மாநிலங்களுக்கு இயக்கப்படுகின்றன. இவற்றின் வாயிலாக தினமும், 1.30 கோடி, வார விடுமுறை நாளில், 1.80 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.


latest tamil news



அதேநேரம் ஊரடங்கால் பெரிய நிறுவனங்கள், ஆம்னி பஸ்களின் இயக்கத்தை துவங்கவில்லை. அத்துடன் மாநில அரசின் வரிக்கு அபராதம் விதிப்பால், சிறு நிறுவனங்களும் பஸ்களை இயக்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் கடந்த, 11ல், 1.80 கோடி, 12ல், 2.40 கோடி, 13ல், 2.30 கோடி என, மூன்று நாளில், அரசு விரைவு பஸ்கள் வாயிலாக, 6.50 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. தீபாவளி பண்டிகையை விட அதிகம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chinnappa Pothiraj - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஜன-202211:41:33 IST Report Abuse
Chinnappa Pothiraj சந்தோசம், அதேவேளையில் அரசு பேருந்துகளை சுதீதமாகவும், சரியான முறையில் பேருந்துகளுக்கைட்டான விதிமுறைகளின்படி பழுது நீக்கியும்,ஓட்டுநர்கள் சரியான முறையில் கியாரையும் கிளட்சையும்(புறப்படும்போதுமட்டும் கிளட்ச் உபயோகம்,பின்னர் ரேஸ் கொடுத்து டமார் டமார் என்று கியர் மாற்றம்தான்) சரியான முறையில் உபயோகப்படுத்தப்படுகிறதா, ஓட்டுநர்களின் பார்வைத்திறனை பரிசோதனைக்குட்படுத்தி கண்கண்ணாடி அணிவதை உறுதிசெய்ய வேண்டும். தொலைதூர பயணம் ஓட்டுநர்களுக்கு சரியானமுறையில் பயண களைப்பு இல்லாதபடி ஆய்வாளர்களின் அறிவுறுத்தல்படி ஓய்வு தரவேண்டும். புது பேருந்து போல் (தனியார் பேருந்துகளின் தரம் போல்) எப்போதும் பராமரிக்கப்படவேண்டும்.விபத்து ஏற்பட்டு ஒரு லட்சம் இரண்டு லட்சம் இழப்பீடு என்ற மனநிலையை மாற்றி விபத்தில்லா பயணத்தை உறுதி செய்யவேண்டும்.வந்தேமாதரம்,ஜெய்ஹிந்த்.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
17-ஜன-202208:49:50 IST Report Abuse
Bhaskaran எல்லாம் காயலான் கடைக்குபோகவேண்டியவை வேறுவழியின்றி மக்கள் பயணிக்கின்றனர்
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
17-ஜன-202206:17:54 IST Report Abuse
Mani . V ஓட்டை, உடைசல் இரும்புகளின் மூலம் இவ்வளவு (ரூ.6.50 கோடி) வசூலா? ஆமா, இவ்வளவு வசூலாகியும் நஷ்டமாகிறதே எப்படி? யார் கொள்ளையடித்துச் செல்கிறார்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X