வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பொங்கல் பண்டிகை விடுமுறையால், மூன்று நாளில், அரசு விரைவு போக்குவரத்து பஸ்கள் வாயிலாக, 6.50 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைத்து உள்ளது.
![]()
|
அரசு விரைவு போக்குவரத்து கழகங்கள் சார்பில், 1,150 பஸ்கள், தமிழகம், அண்டை மாநிலங்களுக்கு இயக்கப்படுகின்றன. இவற்றின் வாயிலாக தினமும், 1.30 கோடி, வார விடுமுறை நாளில், 1.80 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
![]()
|
அதேநேரம் ஊரடங்கால் பெரிய நிறுவனங்கள், ஆம்னி பஸ்களின் இயக்கத்தை துவங்கவில்லை. அத்துடன் மாநில அரசின் வரிக்கு அபராதம் விதிப்பால், சிறு நிறுவனங்களும் பஸ்களை இயக்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் கடந்த, 11ல், 1.80 கோடி, 12ல், 2.40 கோடி, 13ல், 2.30 கோடி என, மூன்று நாளில், அரசு விரைவு பஸ்கள் வாயிலாக, 6.50 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. தீபாவளி பண்டிகையை விட அதிகம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement