அரசு பள்ளிகளில் ஆங்கில ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் பேசி பாடம் நடத்த வேண்டும்: பள்ளி கல்வி கமிஷனரகம்

Updated : ஜன 17, 2022 | Added : ஜன 17, 2022 | கருத்துகள் (36) | |
Advertisement
சென்னை---'அரசு பள்ளிகளில், ஆங்கில ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் பேசி பாடம் நடத்த வேண்டும்' என, பள்ளி கல்வி கமிஷனரகம் அறிவுறுத்தி உள்ளது. பள்ளி கல்வித்துறை பணிகள் குறித்து, விழுப்புரத்தில் மண்டல ஆய்வு கூட்டம் நடந்தது. இதில், விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மற்றும் திருவாரூர் மாவட்ட கல்வி அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், பள்ளி கல்வித்துறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை---'அரசு பள்ளிகளில், ஆங்கில ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் பேசி பாடம் நடத்த வேண்டும்' என, பள்ளி கல்வி கமிஷனரகம் அறிவுறுத்தி உள்ளது.latest tamil newsபள்ளி கல்வித்துறை பணிகள் குறித்து, விழுப்புரத்தில் மண்டல ஆய்வு கூட்டம் நடந்தது. இதில், விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மற்றும் திருவாரூர் மாவட்ட கல்வி அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், பள்ளி கல்வித்துறை கமிஷனர் நந்தகுமார் தலைமையிலான அதிகாரிகள், விழுப்புரம் மண்டலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் நடத்திய ஆய்வின் முடிவுகளை சமர்ப்பித்தனர். இந்த ஆய்வறிக்கை அடிப்படையில், கமிஷனர் தரப்பில் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன.

அதன் விபரம்:ஆசிரியர்களின் பாடக்குறிப்பேடு சரியாக மேற்கொள்ளப்படவில்லை. வகுப்பறை செயல்பாடுகளில் திருப்தி இல்லை. சில ஆசிரியர்களுக்கு பாடம் நடத்தவே தெரியவில்லை. ஆங்கில ஆசிரியர்கள் தமிழில் பேசி பாடம் நடத்துகின்றனர். ஆங்கில பாடம் எடுப்பவர்கள், தமிழில் பேசுவது எப்படி பொருத்தமாக இருக்கும். இதை மாற்றி, அவர்கள் ஆங்கிலத்தில் பேச முயற்சிக்க வேண்டும்.

பள்ளிகளின் கண்காணிப்பு பதிவேடு சரியாக பராமரிக்கப்பட வேண்டும். பதிவேடுகளில் போலியான, தவறான தகவல்கள் இடம் பெறக்கூடாது. தலைமை ஆசிரியருக்கு, மாணவர்களுக்கான பாடங்களை பற்றிய புரிதல் இருக்க வேண்டும். பாடக்குறிப்பேடு எழுதாத ஆசிரியர்கள் மீது, தலைமை ஆசிரியர்கள், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் தலைமை ஆசிரியர் பள்ளி வளாகத்தில் சுற்றி வந்து, வகுப்பறை செயல்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டும்.வகுப்பறைகளில் மாணவர் வழிபாட்டு கூட்டம் நடத்த வேண்டும். கட்டுரை, பாட நோட்டுகள் ஆகியவற்றை உரிய நேரத்தில் ஆசிரியர்கள் திருத்தி, மாணவர்களுக்கு பிழைகளை விளக்க வேண்டும்.


latest tamil newsஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகைப்பதிவை கட்டாயம் பதிவேட்டில் குறிப்பிட வேண்டும். மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவது, பாலியல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து, விரைந்து சரிசெய்ய வேண்டும். வீட்டு பாடங்களை மாணவர்களுக்கு வழங்கி அவற்றை திருத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krish - chennai,இந்தியா
17-ஜன-202217:43:47 IST Report Abuse
krish அந்நிய மொழியை பயில, தாய் மொழியின் உதவி தேவை. அது மருந்தை தேனில் குழைத்து தருவது போல். ஆனால் தேன் அளவுடன் கலக்கப்படுவதுபோல், தேவையான அடிப்படை ஆங்கில அறிவில் தேர்ச்சி பெரும் வரையில், எச்சரிக்கையாக தமிழின்(தாய்மொழி) உதவியுடன், ஆரம்ப மற்றும் உயர்நிலை பள்ளிகளில், ஆங்கிலத்தை சிறுவர்களுக்கு பயில்விக்கவேண்டும். மேலும் ஆசிரியர்கள் ஆங்கிலம் பயில்விக்கும் அணுகுமுறை, அந்தந்த பள்ளியில் பயிலும் மாணவர்களின் அடிப்படை ஆங்கில அறிவு, தேர்ச்சி (ரேடியோ, டிவி, ஊடகங்கள் மூலம் அறியப்பட்ட) மற்றும், குடும்ப, பெற்றோர், நண்பர்கள் கிராமப்புற உற்றார், உறவினர் போன்றவர்களுடன் கலந்து, பழகி, ஆங்கிலம் பேசும் வாய்ப்பு,சூழ்நிலை பொறுத்து அமைவது இயல்பு. இது நான் நடைமுறையில் கண்டறிந்து பயின்ற உண்மை, வரலாறு. ஆங்கிலம் அறிவு பூட்டு என்றால், அதை திறமையுடன் பயில,கற்க, திறக்க, திறவுகோல் (சாவி) தாய்மொழி தமிழ் அவசியம் என்பது எனது பணிவான அபிப்பிராயம். .
Rate this:
Cancel
Rajarajan - Thanjavur,இந்தியா
17-ஜன-202216:31:11 IST Report Abuse
Rajarajan எதோ வாலை நிமிர்த்த முடியாது என்பதால் தானே, அரசு ஆசிரியர் உட்பட, அரசு ஊழியர் அனைவரும், தங்கள் வாரிசுகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர்.
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
17-ஜன-202216:30:59 IST Report Abuse
DVRR அக்கிரமம் அநியாயம் டாஸ்மாக்கினாட்டில் அதாவது திராவிட நாட்டில் ஆங்கிலத்தில் பேசுவதா கூடவே கூடாது தமிழில் தான் பேசவேண்டும் - இப்படிக்கு திருட்டு திராவிட மடியல் அரசு கட்சி கருத்து வாந்தி எடுப்பவர்கள் சங்கம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X