ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் தளர்வு

Updated : ஜன 17, 2022 | Added : ஜன 17, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
மும்பை: ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு பிரிகான்மும்பை முனிசிபல் கார்பரேஷன் உத்தரவின்பேரில் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் தற்போது ஒமைக்ரான் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து வைரஸ் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள சர்வதேச பயணிகளுக்கு மத்திய விமான போக்குவரத்து துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை: ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு பிரிகான்மும்பை முனிசிபல் கார்பரேஷன் உத்தரவின்பேரில் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு உள்ளது.



latest tamil news


இந்தியாவில் தற்போது ஒமைக்ரான் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து வைரஸ் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள சர்வதேச பயணிகளுக்கு மத்திய விமான போக்குவரத்து துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல மத்திய தரைக்கடல் நாடுகளில் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக இந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.


latest tamil news


இந்நிலையில் தற்போது மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு தற்போது கட்டுப்பாடுகளில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது அந்நாட்டு பயணிகளுக்கு ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் விமான நிலையத்தில் பரிசோதிக்கப்பட்ட பின்னர் ஏழு நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதல் இருக்கவேண்டும் என்று முன்னதாக அறிவித்த மத்திய விமான போக்குவரத்து துறை மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் உத்தரவின் பேரில் தற்போது அந்த கட்டுப்பாட்டை நீக்கியுள்ளது. துபாயில் பணிபுரியும் பல்வேறு இந்திய குடிமக்கள் இதனால் தற்போது மகிழ்ச்சியை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
17-ஜன-202213:07:01 IST Report Abuse
S.Baliah Seer எந்த நாட்டில் இருந்து பயணம் செய்கிறார்களோ அந்த நாட்டின் ஏர்போர்ட்டில் தடுப்பூசி சான்றிதழ் கொடுத்தால் மட்டும் போதுமா அல்லது அங்கும் கொரோனா பரிசோதனை செய்கிரார்களா என்றும் தெரியவில்லை.இப்படி அடுக்கடுக்காக சோதனை செய்தும், அவர்கள் மூலம் தொற்று ,இவர்கள் மூலம் தொற்று பரவியது என்று எப்படி சொல்ல முடியும் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X