வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
அலங்காநல்லுார் மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ் பெற்ற அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடந்து முடிந்தது.

நேற்று நடக்க இருந்த ஜல்லிக்கட்டு, முழு ஊரடங்கால் இன்று நடந்தது. சம்பிரதாயத்திற்காக நேற்று, கிராம கோவில் காளைகள் மூன்று மட்டும் வாடிவாசலில் அவிழ்க்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டிக்காக பல்வேறு பணிகள் தீவிரமாக நடந்தன. பார்வையாளர் மாடம், காளைகள் வரும் வழி, பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகளை அமைச்சர் மூர்த்தி, டி.ஐ.ஜி., பொன்னி, எஸ்.பி., பாஸ்கரன் ஆய்வு செய்தனர்.
ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் வீரர்கள் மற்றும் காளைகளுக்கு இன்று மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற்றன. பரிசோதனைக்குப் பிறகே வீரர்கள் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டது. வீரர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்ற பின்பு ஜல்லிக்கட்டு துவங்கியது..

போட்டியில் வெற்றி பெறும். சிறந்த காளைக்கு முதல்வர் ஸ்டாலின் சார்பாகவும், சிறந்த மாடுபிடி வீரருக்கு எம்.எல்.ஏ., உதயநிதி சார்பாகவும் கார்கள் வழங்கப்பட்டன.வாடிவாசலில் அவிழ்த்து விடப்படும் அனைத்து காளைகள், காளையை பிடிக்கும் வீரர்களுக்கும் தலா ஒரு தங்கக்காசு வழங்கப்பட்டது . ஒரு சுற்றுக்கு 30 மாடுபிடி வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE