டாவோஸ் மாநாடு: இன்று பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரை

Updated : ஜன 17, 2022 | Added : ஜன 17, 2022 | கருத்துகள் (4)
Advertisement
டாவோஸ் : 'ஆன்லைன்' வாயிலாக இன்று(ஜன.,17) துவங்கி ஐந்து நாட்கள் நடக்கும் உலக பொருளாதார மன்ற மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷீ ஜிங்பிங் ஆகியோர் இன்று சிறப்புரை ஆற்றுகின்றனர்.ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு ஆண்டுதோறும் நடந்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு இந்த மாநாடு நடக்கவில்லை. 2022க்கு
World Economic Forum, Davos Agenda, Modi,Narendra Modi,நரேந்திர மோடி,மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

டாவோஸ் : 'ஆன்லைன்' வாயிலாக இன்று(ஜன.,17) துவங்கி ஐந்து நாட்கள் நடக்கும் உலக பொருளாதார மன்ற மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷீ ஜிங்பிங் ஆகியோர் இன்று சிறப்புரை ஆற்றுகின்றனர்.

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு ஆண்டுதோறும் நடந்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு இந்த மாநாடு நடக்கவில்லை. 2022க்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது 'ஒமைக்ரான்' வகை தொற்று பரவல் உலகையே அச்சுறுத்தி வருவதால் இந்த ஆண்டு திட்டமிட்ட தேதிகளிலும் மாநாட்டை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.


latest tamil news


எனவே அதே தேதியில் 'ஆன்லைன்' வாயிலாக மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி இன்று துவங்கி ஐந்து நாட்களுக்கு டாவோஸ் உலக பொருளாதார மன்ற மாநாடு நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஷீ ஜிங்பிங் ஆகியோர் இன்று சிறப்புரை ஆற்றுகின்றனர்.

அதன் பின், ஐ.நா., பொது செயலர் ஆன்டோனியோ குட்டரெஸ் உரையாற்றுகிறார். இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னட், ஜப்பான் பிரதமர் கிஷிடா புமியோ நாளை உரையாற்றுகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Samathuvan - chennai,இந்தியா
17-ஜன-202219:29:18 IST Report Abuse
Samathuvan இது பொருளாதாரத்தை பற்றிய மாநாடுல. இதுல ஏன் நம்ம ஜீ கலந்துக்கிறாரு.
Rate this:
Cancel
17-ஜன-202216:22:50 IST Report Abuse
அப்புசாமி இந்த நந்நாளில் இவருடன் 2015 ல டாவோஸுக்கு பயணிச்சு, 11000 கோடியுடன் எஸ்கேப் ஆன அந்த மோடி ஞாபகம் வருது கோவாலு.
Rate this:
Balaji - Chennai,இந்தியா
17-ஜன-202219:21:21 IST Report Abuse
Balajiஇருக்கட்டும் கோவாலு.. பொய்களை நம்புவதே தொழிலாகிவிட்டது சில தமிழர்களுக்கு கோவாலு......
Rate this:
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஜன-202213:57:42 IST Report Abuse
முக்கண் மைந்தன் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X