முழு ஊரடங்கு கடைபிடிப்பு; சாலைகள் வெறிச்

Added : ஜன 17, 2022
Advertisement
பொள்ளாச்சி, உடுமலையில், இரண்டாவது வாரமாக நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், நகரம் வெறிச்சோடி காணப்பட்டது.தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கடந்த வாரம் முதல், ஞாயிற்றுக்கிழமையில், எவ்வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கையும் அமல்படுத்த அரசு உத்தரவிட்டது.பொள்ளாச்சி
 முழு ஊரடங்கு கடைபிடிப்பு; சாலைகள் வெறிச்


பொள்ளாச்சி, உடுமலையில், இரண்டாவது வாரமாக நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், நகரம் வெறிச்சோடி காணப்பட்டது.



தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கடந்த வாரம் முதல், ஞாயிற்றுக்கிழமையில், எவ்வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கையும் அமல்படுத்த அரசு உத்தரவிட்டது.

பொள்ளாச்சி சத்திரம் வீதி, கோட்டூர் ரோடு, கடைவீதி மற்றும் கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் ரோடு, உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளில் நகைக்கடைகள், துணிக்கடைகள், மளிகை கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது.காய்கறி மார்க்கெட்டுகள் மூடப்பட்டன. போக்குவரத்து நிறைந்த பஸ் ஸ்டாண்ட், கோவை ரோடு, நியூஸ்கீம் ரோடு உள்ளிட்ட பகுதிகளிலும் வாகனங்கள் இயக்கம் இல்லாமல் நிசப்தம் நிலவியது.

வருவாய்துறை, போலீசார் மற்றும் அதிகாரிகள் குழு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டது. வாகனங்களில் தேவையில்லாமலும், முகக்கவசம் அணியாமலும் சுற்றியவர்களை பிடித்து போலீசார் அபராதம் விதித்ததுடன், எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

போலீசார் கூறுகையில், 'முழு ஊரடங்கில் விதிமுறை மீறல்களை கட்டுப்படுத்த, டி.எஸ்.பி., தமிழ்மணி தலைமையில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. தமிழக - கேரளா எல்லை சோதனைச்சாவடிகள், கோவை மாவட்ட எல்லைப்பகுதி, இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன ரோந்து போலீசார் என, 100க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்,' என்றனர்
.உடுமலை
உடுமலை அருகேயுள்ள, திருமூர்த்திமலை, அமராவதி அணை உட்பட சுற்றுலா தலங்கள், காணும் பொங்கலன்று, பல்வேறு பகுதிகளைச்சேர்ந்த சுற்றுலா பயணிகளால் களைகட்டும்.நடப்பாண்டு, தொற்றுப்பரவலை தடுக்க, அரசு அறிவித்த முழு ஊரடங்கு காரணமாக, சுற்றுலா தலங்கள், மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடின.
ஊரடங்கை அமல்படுத்தும் வகையில், போலீசார் ஆங்காங்கே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதே போல், உடுமலை நகரிலும், பிரதான ரோடுகளில், வாகன போக்குவரத்து காணப்படவில்லை.அத்தியாவசியப் பணிகளுக்கு சென்ற வாகனங்களை மட்டும், தணிக்கைக்குப்பின் போலீசார் அனுமதித்தனர். கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன.
- நிருபர் குழு -




Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X