பொள்ளாச்சி : பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், நேற்று, 180 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது.
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட ஆறுமுகம் நகர், நேரு காலனி, வெங்கடேசா காலனி, சேர்மேன் வீதி, நந்தனார் காலனி, ரத்தினம் நகர், குறிஞ்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில், 42 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது.தெற்கு ஒன்றியத்தில், மாக்கினாம்பட்டி, கஞ்சம்பட்டி, கோமங்கலம்புதுார், சூளேஸ்வரன்பட்டி, சின்னாம்பாளையம், குஞ்சிபாளையம், நல்லாம்பள்ளி, நாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், 24 பேருக்கு தொற்று உறுதியானது
.வடக்கு ஒன்றியத்தில், போத்தனுார், ஓரக்களியூர், ஆச்சிப்பட்டி, புரவிபாளையம், சின்ன நெகமம், அய்யம்புதுார் உள்ளிட்ட பகுதிகளில், 16 பேருக்கு தொற்று உறுதியானது. தாலுகாவில், நேற்று, 82 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
கிணத்துக்கடவு தாலுகாவில், நல்லட்டிபாளையம், சொக்கனுார், கிணத்துக்கடவு, தாமரைக்குளம், கோப்பனுார்புதுார், கப்பளாங்கரை, வடசித்துார், காட்டம்பட்டி உள்பட பகுதிகளில், 26 பேருக்கு தொற்று பரவல் உறுதியானது.
ஆனைமலை தாலுகாவில், நேற்று, ஆனைமலை, கோட்டூர், ஆழியாறு, ஒடையகுளம், வேட்டைக்காரன்புதுார், மஞ்சநாயக்கனுார், நா.மூ.சுங்கம் உள்பட, 29 பகுதிகளில், 50 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.தொற்று பாதித்த வீடுகளில் கிருமிநாசினி தெளித்து, தொற்று பாதித்தோருடன் தங்கியிருந்த, 120 பேருக்கு சளி மாதிரி சேகரித்தனர். அதிக தொற்று பாதித்த பகுதிகளை, தனிமைபடுத்தப்பட்ட பகுதிகளாக அறிவித்து, கண்காணித்து வருகின்றனர்.
வால்பாறையில், நகராட்சி பொறியாளராக பணியாற்றும் வெங்கடாசலம், 55, நேற்று கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளானார். இதையடுத்து, நகராட்சி அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. மேலும், சோலையாறு அணை மின்வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்கள், 4 பேர்; வால்பாறை கக்கன்காலனியில், 4 பேர்; அண்ணாநகரில் மூவர், உட்பட மொத்தம், 22 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.
பாதுகாப்பு அவசியம்
சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பொள்ளாச்சி கோட்டத்தில், நாளுக்கு, நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.பொதுமக்கள் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்,' என்றனர்.