உடுமலை ; உடுமலை சுற்றுப்பகுதிகளில், பால் உற்பத்திக்காகவும், இறைச்சி தேவைக்காகவும் கால்நடை வளர்ப்பு அதிகளவு மேற்கொள்ளப்படுகிறது. இப்பகுதியில், 13 ஆயிரத்துக்கும் அதிகமான செம்மறி ஆடுகள், 50 ஆயிரத்துக்கும் அதிகமான வெள்ளாடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
பல்வேறு காரணங்களால், ஆடுகளுக்கு, குடற்புழுக்கள் ஏற்பட்டு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. பலவீனம், தீவனம் எடுக்காதது, வளர்ச்சி குறைவு உட்பட பிரச்னைகள் பிரதானமாக ஏற்படுகிறது. எனவே, ஆடுகளுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும் என கால்நடைத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
அத்துறையினர் கூறியதாவது:
ஆட்டுக்குட்டிகளின் மூன்று வார வயதில் குடற்புழு நீக்கம் செய்ய துவங்கலாம். ஆடுகளுக்கு 2 - 3 மாத இடைவேளையில் குடற்புழு நீக்கம் செய்யலாம். அருகிலுள்ள, கால்நடை மருத்துவமனை டாக்டரை அணுகி, பரிந்துரைப்படி, ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்து கொள்ளலாம்.ஆட்டின் எடைக்கு தகுந்தார் போல் குடற்புழு மருந்து அளிக்க வேண்டும். இச்சிகிச்சையால், ஆடுகள் சீரான வளர்ச்சி பெறும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE