ஓசூர் : முழு ஊரடங்கால், மாநில எல்லையான ஓசூர் ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் நேற்று தீவிர கண்காணிப்பு பணி நடந்தது.
தமிழகத்தில் நேற்று முழு ஊரடங்கால், மாநில எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு, நகரின் முக்கிய சாலைகள் வெறிச்சோடின. ஓட்டல்களில் பார்சல் சாப்பாடு மட்டும் வழங்கப்பட்டன. தேவையில்லாமல் சுற்றித்திரிந்தவர்களுக்கு, 500 ரூபாய் வரை போலீசார் அபராதம் விதித்தனர்.
ஜூஜூவாடி சோதனைச்சாவடியில், தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டி.எஸ்.பி., சிவலிங்கம் தலைமையில், கர்நாடகா மாநிலத்திலிருந்து வந்த வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, மருத்துவம், இறப்பு, கோவிலுக்கு சென்ற பக்தர்கள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் அத்தியாவசிய சரக்கு வாகனங்கள் மட்டும் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்பட்டு, மற்ற வாகனங்கள் திருப்பி அனுப்பப் பட்டன.
கர்நாடகாவிலும் நேற்று முழு ஊரடங்கால், தமிழகத்திலிருந்து அம்மாநிலத்திற்கு அவசிய தேவையின்றி சென்ற வாகனங்கள் திருப்பி அனுப்பப் பட்டன. தேசிய நெடுஞ்சாலை மற்றும் அத்திப்பள்ளி டோல்கேட்டில், வழக்கத்திற்கு மாறாக வாகன போக்குவரத்து குறைந்திருந்தது. தமிழகத்தில் பஸ்கள், ஆட்டோ, டாக்சி சேவை இல்லாததால், ஓசூர் பஸ் ஸ்டாண்ட் வெறிச்சோடியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE