சேலம் : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பே வராத நிலையில் தி.மு.க.வினர் காலண்டர் வினியோகிக்க அ.தி.மு.க.வினரும் களமிறங்கி உள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு பிப்ரவரியில் வெளியாகும் எனத் தெரிகிறது. இதனால் கட்சி மேலிடங்கள் வேட்பாளர் பட்டியல் தயாரிப்பில் இறங்கியுள்ளன. இந்நிலையில் சேலம் மாநகராட்சியில் தங்களுக்கு வாய்ப்பு உறுதி என நம்பும் தி.மு.க. நிர்வாகிகள் தங்கள் வார்டு பகுதியில் தேர்தல் பணிக்கு ஆயத்தமாகி விட்டனர்.முதல்வர் ஸ்டாலின் உதயநிதி மாவட்ட செயலர் ராஜேந்திரன் படங்களுடன் அச்சிட்ட காலண்டர்களை வினியோகிக்க தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக கொண்டலாம்பட்டி மண்டலத்தில் கடந்த மூன்று நாட்களாக நிர்வாகி ஒருவர் காலண்டர் வினியோகத்தில் தீவிரம் காட்டினார். இதேபோல் பல வார்டுகளில் தி.மு.க.வினரின் காலண்டர் வினியோகித்து வருகின்றனர். இதை கவனித்த அ.தி.மு.க.வினரும் காலண்டர் வினியோகத்தை தொடங்கிஉள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE