போலி பிரஸ் ஸ்டிக்கரில் சுற்றியவர் வாகனங்கள் பறிமுதல்

Added : ஜன 17, 2022
Advertisement
வேலுார் : ஊரடங்கில், போலி பிரஸ் ஸ்டிக்கரில் சுற்றியவர் வாகனங்களை வேலுாரில் போலீசார் பறிமுதல் செய்தனர்.கொரோனா தொற்று பரவாமல் தடுக்க, தமிழகத்தில் நேற்று ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வேலுார் வடக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, காந்தி சிலை அருகில் வாகனங்களில் பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு சென்றவர்களை நிறுத்தி விசாரித்தனர்.அதில் அவர்கள்

வேலுார் : ஊரடங்கில், போலி பிரஸ் ஸ்டிக்கரில் சுற்றியவர் வாகனங்களை வேலுாரில் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க, தமிழகத்தில் நேற்று ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வேலுார் வடக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, காந்தி சிலை அருகில் வாகனங்களில் பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு சென்றவர்களை நிறுத்தி விசாரித்தனர்.அதில் அவர்கள் பத்திரிக்கையாளர்கள் இல்லை என்றும், ஊரடங்கின் போது வெளியே சுற்றுவதற்காக, போலியாக பிரஸ் ஸ்டிக்கர் தயாரித்து, வாகனங்களில் ஒட்டிக்கொண்டு சென்றது தெரியவந்தது.

வேலுார், காட்பாடி, சத்துவாச்சாரி, குடியாத்தம், பேர்ணம்பட்டு, ஒடுக்கத்துார் பகுதிகளில் போலி பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு சென்ற, 120 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து, அவர்களை கொண்டே பிரஸ் ஸ்டிக்கரை அப்புறப்படுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X