சிம்லா : ஹிமாச்சல பிரதேசத்தில் 'பாராகிளைடிங்'கில் பறக்க விரும்பிய 12 வயது சிறுவன் விபத்தில் சிக்கி உயிரிழந்தான்.
ஹிமாச்சல பிரதேசத்துக்கு, கர்நாடகாவின் பெங்களூரை சேர்ந்த ரிஷப் திரிபாதி - சாரதா என்ற தம்பதியினர், தங்கள் மகன் ஆத்விக், 12, மற்றும் 7 வயது மகளுடன் வந்திருந்தனர்.இங்குள்ள பிர் பில்லிங் என்ற சுற்றுலா தலத்திற்கு கடந்த மாதம் அவர்கள் சென்றனர். அங்கு 'பாராகிளைடிங்' எனப்படும், பாராசூட் போன்ற சாதனத்தில் காற்றில் பறந்து செல்லும் சாகச விளையாட்டு மிகவும் பிரபலம்.பாராகிளைடிங்கில் செல்ல ஆத்விக் விரும்பியதால், பாராகிளைடர் இருக்கும் இடத்திற்கு செல்ல, குழுவினர் ஏற்பாடு செய்திருந்த ஜீப் ஒன்றில், ஆத்விக் குடும்பத்தினர் பயணித்தனர்.
அப்போது எதிரில் வந்த இருசக்கர வாகனத்தில் ஜீப் மோதியது. அந்த ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பாறையில் மோதி ஆத்விக்கின் தலையில் படுகாயம் ஏற்பட்டது. மற்றவர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டன.இதில் மருத்துவமனையில் ஆத்விக் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற அனைவரும் சிகிச்சைக்குப் பின் குணமடைந்தனர்.
இந்நிலையில் பெரும் சோகத்தில் இருந்த மீண்டுள்ள ஆத்விக்கின் தந்தை ரிஷப், ''இதுபோன்ற விபத்துகள் எதிர்காலத்தில் நடக்காமல் இருப்பதை மாநில அரசு உறுதிபடுத்த வேண்டும்,” என கோரிக்கை வைத்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE