சென்னை : வருமான வரி அலுவலகத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுவதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி மண்டல வருமான வரி அலுவலக முதன்மை தலைமை கமிஷனர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வருமான வரி அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளிடையே, கொரோனா பரவாமல் இருக்க, சென்னை மாநகராட்சியுடன் இணைந்து, சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.வருமான வரி அலுவலகங்களில், மத்திய அரசின் உத்தரவுப் படி, உதவி கமிஷனர் பதவிக்கு கீழ் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், 50 சதவீதம் பேர் மட்டுமே அலுவலகம் வர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முகக்கவசம், கை கழுவுதல், தனிமனித இடைவெளி மற்றும் பொது சுகாதாரம் போன்ற, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றன.வருமான வரி அலுவலகத்தில் நடத்தப்பட்ட தடுப்பூசி முகாம்கள் வாயிலாக, 4,000 ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுஉள்ளனர்.
மேலும், கொரோனா தொற்று சோதனை, தனிமைப்படுத்துதல், தொலை மருத்துவம், சிகிச்சை, மருத்துவமனையில் சேர்த்தல் போன்றவை, அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் கிடைக்கும் வகையில், 'கொரோனா மீட்பு குழு' அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE