திருமலையில் தனிமையில் பார்வேட்டு உற்சவம்

Added : ஜன 17, 2022
Advertisement
திருப்பதி : திருமலையில் உள்ள கல்யாண உற்சவ மண்டபத்தில் தனிமையில் பார்வேட்டு உற்சவம் நடத்தப்பட்டது.திருமலை ஏழுமலையான் கோவிலில் காணும் பொங்கல் அன்று மலையப்பஸ்வாமி ஸ்ரீதேவி பூதேவி நாச்சியார்களுடன் அருகில் உள்ள பார்வேட்டு மண்டபத்திற்கு சென்று அங்கு வனத்தில் விலங்குகளை வேட்டையாடி பின் திரும்புவது வழக்கம்.தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், திருமலை
திருமலையில் தனிமையில் பார்வேட்டு உற்சவம்

திருப்பதி : திருமலையில் உள்ள கல்யாண உற்சவ மண்டபத்தில் தனிமையில் பார்வேட்டு உற்சவம் நடத்தப்பட்டது.


திருமலை ஏழுமலையான் கோவிலில் காணும் பொங்கல் அன்று மலையப்பஸ்வாமி ஸ்ரீதேவி பூதேவி நாச்சியார்களுடன் அருகில் உள்ள பார்வேட்டு மண்டபத்திற்கு சென்று அங்கு வனத்தில் விலங்குகளை வேட்டையாடி பின் திரும்புவது வழக்கம்.தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், திருமலை தேவஸ்தானம் பார்வேட்டு உற்சவத்தை இம்முறையில் கல்யாண உற்சவ மண்டபத்தில் தனிமையில் நடத்தியது.நேற்று மதியம் மலையப்பஸ்வாமியை கல்யாண உற்சவ மண்டபத்தில் எழுந்தருளச் செய்து அங்கு வனம் போன்ற அமைப்பை ஏற்படுத்தியது.
பின்னர் மலையப்பஸ்வாமி வாள், வில், கத்தி, கேடயம் உள்ளிட்டவற்றை கையில் ஏந்தி வேட்டைக்கு சென்று வேட்டையாடுவது போல் அர்ச்சகர்களும், அதிகாரிகளும் உற்சவத்தை நடத்தி காண்பித்தனர். இதில், தேவஸ்தான அதிகாரிகள், அர்ச்சகர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

மண்டலாபிஷேகம்
திருமலை ஸ்ரீவாரி திருக்குளக்கரையில் எழுந்தருளியுள்ள பூவராகஸ்வாமி கோவில் கருவறை விமானத்திற்கு தங்க மூலாம் பூசப்பட்டு, மகாசம்ப்ரோக்ஷணம் நடந்து 48 நாட்கள் நிறைவு பெற்றதை ஒட்டி நேற்று காலை மண்டலாபிஷேகத்தை தேவஸ்தானம் நடத்தியது.கோபூஜைதிருப்பதி அலிபிரியில் உள்ள கோசாலையில் தேவஸ்தானம் காணும் பொங்கலை ஒட்டி சிறப்பு பூஜைகளை நடத்தியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X