தமிழர் வாழ்வு சிறக்க, ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி வழியெல்லாம் நடக்க வேண்டாமா...

Updated : ஜன 17, 2022 | Added : ஜன 17, 2022 | கருத்துகள் (31)
Advertisement
தி.மு.க., இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை: தமிழர் விடியலாய், தி.மு.க., அரசு அமைந்த பிறகு, புது மகிழ்ச்சியோடு, முதல் தமிழர் திருநாளில், தமிழர் தம் வாழ்வு சிறக்க, முதல்வர் ஸ்டாலின் வழிநடக்க உறுதி ஏற்போம்.அப்போ, தமிழர் வாழ்வு சிறக்க, ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி வழியெல்லாம் நடக்க வேண்டாமா... எட்டு மாதங்களில் அவர்களை மறந்து விட்டீர்களே!இந்திய கட்டுமான தொழிலாளர்
உதயநிதி-ஸ்டாலின், ஜி.கே.வாசன்

தி.மு.க., இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை: தமிழர் விடியலாய், தி.மு.க., அரசு அமைந்த பிறகு, புது மகிழ்ச்சியோடு, முதல் தமிழர் திருநாளில், தமிழர் தம் வாழ்வு சிறக்க, முதல்வர் ஸ்டாலின் வழிநடக்க உறுதி ஏற்போம்.


அப்போ, தமிழர் வாழ்வு சிறக்க, ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி வழியெல்லாம் நடக்க வேண்டாமா... எட்டு மாதங்களில் அவர்களை மறந்து விட்டீர்களே!



இந்திய கட்டுமான தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில பொதுச்செயலர் குமார் பேட்டி
: தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், முந்தைய, அ.தி.மு.க., அரசு வழங்கிய பொங்கல் பரிசை கூட, தற்போதைய, தி.மு.க., அரசு தட்டிப்பறித்து விட்டது.


தி.மு.க., அரசு பதவிக்கு வந்து, எட்டு மாதங்கள் தான் ஆகிறது. அதற்குள், பல தரப்பினருக்கும், பல விதமான அதிருப்தி நிலவுகிறதே... காரணம், அக்கட்சியின் நிறைவேறாத தேர்தல் வாக்குறுதிகள் தானா?



த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட, ௪௩ தமிழக மீனவர்களுக்கான காவலை, வரும், ௨௭ வரை நீட்டித்துள்ள இலங்கை அரசின் போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது. இலங்கை அரசின்இந்த அறிவிப்பால், தமிழக மீனவர் குடும்பத்தினர் கவலை அடைந்து உள்ளனர்.


ஒவ்வொரு ஆண்டும், பொங்கல் பண்டிகையின் போதும், இப்படித் தான் பல தமிழர்களை, இலங்கை கடற்படை சிறை பிடிக்கிறது. இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு எப்போதோ?



தமிழக வாழ்வுரிமை என்ற கட்சியின் தலைவர் வேல்முருகன் பேட்டி
: மக்கள் போராட்டத்தின் மூலமாகவும், சட்ட போராட்டத்தின் மூலமாகவும், நிச்சயமாக, தமிழகத்திற்கு, 'நீட்' தேர்விலிருந்து விலக்கு கிடைக்கும். நீட் தேர்வு, சமூக அநீதி தேர்வு.


latest tamil news




உங்களுக்கு வேண்டிய, நெருக்கமான, தி.மு.க., அரசு தமிழகத்தில் பதவியில் உள்ளது.எனவே, மக்களை திரட்டி போராட்டமெல்லாம் நடத்த மாட்டீர்கள்; சட்ட போராட்டம் தான்... அதுவும், தோழமை கட்சிகளுடன் சேர்ந்து தான் இருக்கும்!



பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா அறிக்கை
: தமிழகத்தில் தான் பள்ளி படிப்பை முடித்தேன். அங்கு படித்த போது, நான் கற்ற முதல் வார்த்தை, 'போடா டேய்' என்பது தான். இந்த வார்த்தையை பல நேரங்களில் நான் பயன்படுத்தியுள்ளேன். சில நேரங்களில் அந்த வார்த்தையை நான் மனதுக்குள் தான் சொல்லிக் கொள்வேன்.


ஆம். எளிய அந்த வார்த்தையின் ஒரு பகுதியை, தமிழகத்தில் சில கட்சிகள், 'ஹிந்தி தெரியாது போடா..' என பயன்படுத்துகின்றன. அதையும் அறிந்திருப்பீர்களே!


Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajasekaran - Chennai,இந்தியா
17-ஜன-202220:14:25 IST Report Abuse
Rajasekaran அந்நிய நாடுகளில் வாழும் தமிழர்கள் எத்தனை பேர் இந்த மாதிரி ஒரு விடியலுக்காக காத்திருந்தார்கள் ?
Rate this:
Cancel
ayen - ,
17-ஜன-202219:48:37 IST Report Abuse
ayen தமிழர் என்றால் எல்லா. மதத்தினரும் அடங்குவர் அப்படி இருக்க இந்துக்களை தவிர மற்றவர்கள் ( கிருஸ்துவர்கள், முகமதியர்கள) ஏன் இந்த நாளில் கொண்டாடுவது இல்லை. அப்படி இருக்கும் பொழுது கலைஞர் எப்படி தை முதல் நாள் தமிழர் திருநாள் என்று அறிவித்தார். உதயநிதி மாறன் ஸ்டாலின் வழி நடப்போம் எனகிறார் அப்படி என்றால் இளமை பருவத்தில்லிருந்தா? அப்படி ஒரு வழி இந்த தலைமுறைக்கே தேவை இல்லை. பணம் பத்தும் செய்யும். ஏற்ப பணத்தினால் முதல்வர் ஆனவர் தானே இந்த ஸ்டாலின். இந்த பணம் என்ன செய்ய போகுதோ நம் தமிழகத்தை.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
17-ஜன-202218:34:05 IST Report Abuse
J.V. Iyer முதல்வர் ஸ்டாலின் வழியில் நடந்தால் அவர் கோபித்துக்கொள்வார். போலீசும் விடமாட்டார்கள். விலகி நடப்பதுதான் நல்லது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X