தி.மு.க., இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை: தமிழர் விடியலாய், தி.மு.க., அரசு அமைந்த பிறகு, புது மகிழ்ச்சியோடு, முதல் தமிழர் திருநாளில், தமிழர் தம் வாழ்வு சிறக்க, முதல்வர் ஸ்டாலின் வழிநடக்க உறுதி ஏற்போம்.
அப்போ, தமிழர் வாழ்வு சிறக்க, ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி வழியெல்லாம் நடக்க வேண்டாமா... எட்டு மாதங்களில் அவர்களை மறந்து விட்டீர்களே!
இந்திய கட்டுமான தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில பொதுச்செயலர் குமார் பேட்டி: தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், முந்தைய, அ.தி.மு.க., அரசு வழங்கிய பொங்கல் பரிசை கூட, தற்போதைய, தி.மு.க., அரசு தட்டிப்பறித்து விட்டது.
தி.மு.க., அரசு பதவிக்கு வந்து, எட்டு மாதங்கள் தான் ஆகிறது. அதற்குள், பல தரப்பினருக்கும், பல விதமான அதிருப்தி நிலவுகிறதே... காரணம், அக்கட்சியின் நிறைவேறாத தேர்தல் வாக்குறுதிகள் தானா?
த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட, ௪௩ தமிழக மீனவர்களுக்கான காவலை, வரும், ௨௭ வரை நீட்டித்துள்ள இலங்கை அரசின் போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது. இலங்கை அரசின்இந்த அறிவிப்பால், தமிழக மீனவர் குடும்பத்தினர் கவலை அடைந்து உள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும், பொங்கல் பண்டிகையின் போதும், இப்படித் தான் பல தமிழர்களை, இலங்கை கடற்படை சிறை பிடிக்கிறது. இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு எப்போதோ?
தமிழக வாழ்வுரிமை என்ற கட்சியின் தலைவர் வேல்முருகன் பேட்டி: மக்கள் போராட்டத்தின் மூலமாகவும், சட்ட போராட்டத்தின் மூலமாகவும், நிச்சயமாக, தமிழகத்திற்கு, 'நீட்' தேர்விலிருந்து விலக்கு கிடைக்கும். நீட் தேர்வு, சமூக அநீதி தேர்வு.

உங்களுக்கு வேண்டிய, நெருக்கமான, தி.மு.க., அரசு தமிழகத்தில் பதவியில் உள்ளது.எனவே, மக்களை திரட்டி போராட்டமெல்லாம் நடத்த மாட்டீர்கள்; சட்ட போராட்டம் தான்... அதுவும், தோழமை கட்சிகளுடன் சேர்ந்து தான் இருக்கும்!
பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா அறிக்கை: தமிழகத்தில் தான் பள்ளி படிப்பை முடித்தேன். அங்கு படித்த போது, நான் கற்ற முதல் வார்த்தை, 'போடா டேய்' என்பது தான். இந்த வார்த்தையை பல நேரங்களில் நான் பயன்படுத்தியுள்ளேன். சில நேரங்களில் அந்த வார்த்தையை நான் மனதுக்குள் தான் சொல்லிக் கொள்வேன்.
ஆம். எளிய அந்த வார்த்தையின் ஒரு பகுதியை, தமிழகத்தில் சில கட்சிகள், 'ஹிந்தி தெரியாது போடா..' என பயன்படுத்துகின்றன. அதையும் அறிந்திருப்பீர்களே!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE