எம்.ஜி.ஆர் பிறந்தநாள்; பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து

Updated : ஜன 17, 2022 | Added : ஜன 17, 2022 | கருத்துகள் (18)
Advertisement
புதுடில்லி: தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாளை இன்று (ஜன.,17) அதிமுக.,வினர் கொண்டாடி வருகின்றனர். மேலும், தமிழக அரசின் சார்பில் சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்புடன்
PMModi, MGR, Wishes, Tamil, பிரதமர், மோடி, எம்ஜிஆர், பிறந்தநாள், வாழ்த்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாளை இன்று (ஜன.,17) அதிமுக.,வினர் கொண்டாடி வருகின்றனர். மேலும், தமிழக அரசின் சார்பில் சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. எம்.ஜி.ஆர்-க்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


latest tamil news


இது தொடர்பாக பிரதமர் தெரிவித்ததாவது: பாரத ரத்னா எம்.ஜி.ஆரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். சமூகநீதி, அதிகாரமளித்தல் ஆகியவற்றில் முதன்மையான சிறந்த தலைவராக அவர் பரவலாகப் போற்றப்படுகிறார். அவரது திட்டங்கள் ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தன. அவரது திரையுலக பெருந்திறனும் அனைவராலும் போற்றப்படுகிறது. இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
17-ஜன-202218:32:07 IST Report Abuse
J.V. Iyer நல்லவர்கள் பற்றிய விஷயங்கள் நல்லவர்களுக்குத்தான் தெரியும்.
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
17-ஜன-202216:00:18 IST Report Abuse
Vijay D Ratnam இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும். எம்ஜிஆர் மறைந்து 34ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இன்றும் அவரை வைத்து அரசியல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டு அரசியலில் காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா இந்த நால்வருக்கும் எப்போதும் தமிழக மக்கள் மனதில் ஓர் இடம் உண்டு. வாரிசு இல்லாதது ஒரு பெரிய காரணம். வாரிசுகளை இறக்கிவிட்டு அரசியலை குடும்ப சாக்கடையாக்காதது. இன்றைக்கும் மெரினாவில் கருணாநிதி சமாதி என்பது எடப்பாடி கே பழனிசாமி போட்ட பிச்சை.
Rate this:
Cancel
பிடிகிட்டாபுள்ளி - எத்தியோப்பியா,மங்கோலியா
17-ஜன-202214:56:37 IST Report Abuse
பிடிகிட்டாபுள்ளி எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X