போபால் : மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள புலிகள் காப்பகத்தில் 29 குட்டிகளை ஈன்ற காலர்வாலி என்ற பெண் புலி, வயது முதிர்வால் மரணம் அடைந்தது.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பென்ச் புலிகள் காப்பகத்தின் ராணி என அழைக்கப்பட்ட காலர்வாலி, என்ற பெண் புலிக்கு வயது 16. இந்தப் புலி 2008ம் ஆண்டு, முதல் பிரசவத்தில் மூன்று குட்டிகளை ஈன்றது. அவை மூன்றுமே உடல்நலக்குறைவால் உயிரிழந்தன. இதையடுத்து அந்த புலி, தொடர்ச்சியாக அவ்வப்போது குட்டிகளை ஈன்று வந்தது. இந்த புலி தன் வாழ்நாளில் 29 குட்டிகளை ஈன்றது.
புலிகளின் வயது 17 என கணக்கிடப்பட்டுஉள்ளது. அதன்படி காலர்வாலி 16 ஆண்டுகள் ஆன நிலையில், வயது முதிர்வு மற்றும் அதன் காரணமாக ஏற்பட்ட தளர்வால் நேற்று மரணம் அடைந்தது. பென்ச் புலிகள் காப்பகத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக இருந்த காலர்வாலியின் மரணம், வன உயிரின ஆர்வலர்களிடம் சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE