திருப்பூர்: பருத்தி பஞ்சு விலை, நூல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பின்னலாடை துறையினர் 2 நாட்கள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆடை உற்பத்தி மூலப்பொருளான ஒசைரி நூல் விலை கடந்த 15 மாதங்களில் கிலோவுக்கு 200 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. இதனால் வெளிநாட்டு, வெளிமாநிலத்தவர்களிடம் ஆர்டர்கள் எதுவும் திருப்பூர் பின்னலாடை துறையினருக்கு பெறவில்லை. கைநழுவி போட்டி நாடுகளுக்கு செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கள் 2 நாட்கள் உற்பத்தி நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். ஏற்றுமதி, உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்கள், நெட்டிங், டையிங், பிரிண்டிங் என சார்பு நிறுவனங்கள் என 15 ஆயிரம் நிறுவனங்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.
ஒரு நாள் போராட்டம் காரணமாக ரூ.200 கோடி அளவுக்கு உற்பத்தி முடங்கி உள்ளது. 2 நாட்கள் போராட்டத்தினால் 400 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படும் என தெரிகிறது. பொங்கல் பண்டிகை முடிந்த உடன் உற்பத்தியை துவக்க அவசர கதியில் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், தற்போது போராட்டம் நடந்து வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE