சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனராக செந்தாமரை கண்ணன் நியமனம்

Updated : ஜன 17, 2022 | Added : ஜன 17, 2022 | கருத்துகள் (22)
Advertisement
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனராக இருந்த புவியரசன் இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய இயக்குனராக செந்தாமரை கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.சென்னையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக திடீரென கனமழை கொட்டியது. இதனால், மக்கள் அதிகளவு சிரமத்திற்கு உள்ளானார்கள். இந்த திடீர் மழையை சென்னை வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே கணிக்க தவறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது
Chennai, IMD, Puviyarasan, Senthamarai Kannan, Replace, சென்னை, வானிலை ஆய்வு மையம், புவியரசன், இடமாற்றம், செந்தாமரை கண்ணன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனராக இருந்த புவியரசன் இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய இயக்குனராக செந்தாமரை கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக திடீரென கனமழை கொட்டியது. இதனால், மக்கள் அதிகளவு சிரமத்திற்கு உள்ளானார்கள். இந்த திடீர் மழையை சென்னை வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே கணிக்க தவறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து கருத்து தெரிவித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், ‛வானிலை நிலவரங்கள் துல்லியமாக கணித்து சொல்ல முடியாத நிலை சென்னையில் உள்ளது,' என்றார்.


latest tamil news


இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய உள்துறை அமித்ஷாவிற்கு, சென்னை வானிலை ஆய்வு மையத்தினை மேம்படுத்திட கோரி கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனராக இருந்த புவியரசன் இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய இயக்குனராக செந்தாமரை கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Samathuvan - chennai,இந்தியா
17-ஜன-202219:15:22 IST Report Abuse
Samathuvan அட பாவிகளா? இந்த ஜோஸ்யக்காரனை கண்ணமூடிக்கிட்டு நம்புறானுங்க, இந்த விஞானத்தை நம்ப மறுக்கிறார்கள்.
Rate this:
18-ஜன-202205:49:14 IST Report Abuse
ராஜாஜோசியம் பற்றி உனக்கு என்ன தெரியும்?...
Rate this:
Cancel
17-ஜன-202218:29:43 IST Report Abuse
ராஜா புவியரசன் அமைதியாக இருந்திருக்கலாம். விடியல் ஆட்சியின் உருட்டு தெரியாமல் கருவிகளை பற்றி பேசி கடைசியில் மாட்டிக்கொண்டார். கருவிகள் சரியில்லை என்று தொடர்ந்து கடுமையாக வற்புறுத்தியிருக்க வேண்டுமே தவிர்த்து ஒன்றில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள அதை ஆயுதமாக பயன்படுத்தியிருக்கக் கூடது. இது மக்கள் தொடர்பு பொறுப்பில் இருக்கும் எந்தவொரு அதிகரிக்கும் பொருந்தும்.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
17-ஜன-202216:54:05 IST Report Abuse
Bhaskaran Ullathai sonnaal melidathukku pidikaathu .
Rate this:
17-ஜன-202218:33:29 IST Report Abuse
ராஜாகிடையாது! ஒரு அதிகாரிக்கு தவறு நடந்தால் அதன் பொறுப்பை ஏற்று அதை சரிசெய்ய தெரிந்திருக்க வேண்டும். கருவிகளை குற்றம் சொல்ல அதுவல்ல நேரம். வருங்காலத்தில் இப்படிபட்ட விசயங்களை நவீன கருவிகள் கொண்டு மேம்படுத்துவோம் என்று கூறியிருக்க வேண்டும்....
Rate this:
17-ஜன-202218:33:38 IST Report Abuse
ராஜாகிடையாது! ஒரு அதிகாரிக்கு தவறு நடந்தால் அதன் பொறுப்பை ஏற்று அதை சரிசெய்ய தெரிந்திருக்க வேண்டும். கருவிகளை குற்றம் சொல்ல அதுவல்ல நேரம். வருங்காலத்தில் இப்படிபட்ட விசயங்களை நவீன கருவிகள் கொண்டு மேம்படுத்துவோம் என்று கூறியிருக்க வேண்டும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X