பனாஜி: கோவா சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் எம்.பி., சிதம்பரம் தெரிவித்த கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ள ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், ‛அழுகையை நிறுத்துங்கள் சிதம்பரம், பா.ஜ.,வுக்கு பெரிய நம்பிக்கையே காங்கிரஸ்தான்,' எனக் கிண்டலடிக்கும் விதமாக தெரிவித்துள்ளார்.
கோவாவில் பிப்.,14ம் தேதி சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், பா.ஜ., காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி என பலமுனை போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், அங்கு காங்கிரஸ் தேர்தல் பார்வையாளராக இருக்கும் மூத்த தலைவர் சிதம்பரம் கூறுகையில், ‛ஆம் ஆத்மியும் திரிணமுல் காங்கிரசும் பா.ஜ.,வின் எதிர்ப்பு வாக்குகளைப் பிரிப்பதற்கு மட்டுமே உதவுகின்றன. இது பா.ஜ.,வுக்கு உதவுகிறது. இதை அரவிந்த் கெஜ்ரிவால் உறுதிப்படுத்தியுள்ளார். கோவா மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு காங்கிரசிற்கு ஓட்டளியுங்கள்,' என்றார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருப்பதாவது: அழுகையை நிறுத்துங்கள் சிதம்பரம் சார். கோவா மக்கள் நம்பிக்கையை எங்கு பார்க்கிறார்களோ அங்கு ஓட்டளிப்பார்கள். பா.ஜ.,வுக்கு பெரிய நம்பிக்கையே காங்கிரஸ்தான், கோவா மக்கள் அல்ல. உங்களின் 17 எம்எல்ஏ.,க்களில் 15 பேர் பா.ஜ.,வுக்கு மாறினர். காங்கிரசுக்கு அளிக்கும் ஒவ்வொரு ஓட்டும் பாதுகாப்பாக பா.ஜ.,வுக்குச் செல்லும் என்பதை காங்கிரஸ் உறுதி செய்து வருகிறது. இவ்வாறு கெஜ்ரிவால் பதிலடி கொடுத்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE