வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பஞ்சாப் சட்டசபை தேர்தல் பிப்.,20ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
117 சட்டசபை தொகுதிகள் கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கு வரும் பிப்.,14ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கும் எனவும், மார்ச் 10 ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில்பிப்.,16ல் குரு ரவிதாசின் பிறந்த நாள் வருகிறது. இதற்காக, அவரை பின்பற்றும் லட்சகணக்கான மக்கள், பிப்.,10 முதல் 16 ம் தேதி வரை உ.பி., மாநிலம் வாரணாசிக்கு புனித யாத்திரை மேற்கொள்வார்கள். இதனால், அவர்களால் ஓட்டுப்போட முடியாத சூழ்நிலை உருவானது. இதனால், தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் எனக்கூறி தலைமை தேர்தல் கமிஷனுக்கு பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, பா.ஜ., அமரீந்தர் சிங் உள்ளிட்டோர் வலியுறுத்தினர். இதனையடுத்து தேர்தல் தேதியை மாற்றுவது தொடர்பாக தேர்தல் ஆணையர்கள் தீவிர ஆலோசனை நடத்தினர்.

இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அரசியல் கட்சி பிரதிநிதிகள், மாநில அரசு மற்றும் தேர்தல் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு, பஞ்சாப் தேர்தல் தேதியை மாற்றுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பிப்.,14க்கு பதில், பஞ்சாப் சட்டசபைக்கு தேர்தல் பிப்ரவரி மாதம் 20ம் தேதி தேர்தல் நடக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் - பிப்.,1
வேட்புமனு மீதான பரிசீலனை - பிப்.,2
வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாள்- பிப்.,4
ஓட்டுப்பதிவு - பிப்.,20
ஓட்டு எண்ணிக்கை மார்ச்-10
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE