புதுடில்லி: நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி எனக்கூறி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக அனைத்து கட்சி எம்.பி.,க்கள் சந்தித்தனர்.
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க , தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., பா.ம.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பிரதிநிதிகள் அடங்கிய குழு முயற்சி மேற்கொண்டது. ஆனால், அனுமதி கிடைக்காததற்கு எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து இன்று (ஜன.,17) அனைத்து கட்சி குழுவை அமித்ஷா சந்திக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

இதனை தொடர்ந்து டில்லி சென்ற அனைத்து கட்சி குழுவினர் மாலையில் அமித்ஷாவை சந்தித்து பேசினர். அப்போது, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தியதுடன் இது தொடர்பாக மனுவையும் அளித்தனர்.
இதன் பின்னர் தி.மு.க., எம்.பி., டி.ஆர்.பாலு கூறுகையில், தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து உடனடியாக விலக்கு அளிக்க வலியுறுத்தி மனு அளித்தோம். மத்திய சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்தப்படும் என அமித்ஷா தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE