எருது விடும் விழாவில் மாடு முட்டி முதியவர் பலி

Added : ஜன 17, 2022 | |
Advertisement
வேலுார்: வேலுார் அருகே நடந்த எருது விடும் விழாவில், மாடு முட்டி முதியவர் இறந்தார்வேலுார் மாவட்டம், லத்தேரி அருகே கீழ்முட்டுகூர் பகுதியில் இன்று எருது விடும் விழா நடந்தது. 200 க்கும் மேற்பட்ட காளைகள் 500 க்கும் மேற்பட்டவர்கள் அடக்கினர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதை அதிகாரிகள்

வேலுார்: வேலுார் அருகே நடந்த எருது விடும் விழாவில், மாடு முட்டி முதியவர் இறந்தார்வேலுார் மாவட்டம், லத்தேரி அருகே கீழ்முட்டுகூர் பகுதியில் இன்று எருது விடும் விழா நடந்தது. 200 க்கும் மேற்பட்ட காளைகள் 500 க்கும் மேற்பட்டவர்கள் அடக்கினர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. விழா முடியும் போது, திடிரென பாய்ந்து வந்த மாடு முட்டித் தள்ளியதில், லத்தேரி எஸ்.ஐ., சுப்பிரமணி, 50, என்பவர் படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு வேலுார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அதே போல, வேலுார் அருகே கீழ் அரசம்பட்டு கிராமத்தில் மாடு விடும் விழா நடந்தது. அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த திருவண்ணாமலைம ாவட்டம், ஆரணி நெசல் புதுப்பேட்டையை சேர்ந்த நாமதேவன், 60, என்பவரை மாடு முட்டியதில், சம்பவம் நடந்த இடத்திலேயே அவர் இறந்தார். வேலுார் தாலுகா போலீசார் விசாரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X