சென்னை: குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளதாவது: தமிழகத்தின் விடுதலைக்காக போராடிய வ.உ.சி., மகாகவி பாரதியார், ராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆகிய விடுதலை போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தி இடம்பெறுவது மறுக்கப்பட்டு இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. இதில் பிரதமர் உடனடியாக தலையிட்டு சுதந்திர போராட்ட வரலாற்றில் தமிழகத்தின் பங்களிப்பு இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

தமிழக அலங்கார ஊர்தி தொடர்பாக மாநில அதிகாரிகள் 3 முறை ஆஜராகி விளக்கம் அளித்தனர். 4வது கூட்டத்திற்கு தமிழக அதிகாரிகளை அழைக்காமலேயே குடியரசு தின அணிவகுப்பு பட்டியலில் இருநது பெயர் நீக்கப்பட்டது. திருத்தங்கள் செய்து சமர்ப்பிக்கப்பட்ட 7 மாதிரிகளையும் மத்திய அரசின் குழுவினர் நிராகரித்துள்ளது ஏற்க முடியவில்லை. இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE