வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருப்பூர்: திருப்பூரில் 6 பேரும், பெரம்பலூரில் 3 பேரும் ஆற்றில் குளிக்க சென்ற போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
பெரம்பலூர் அருகே வி.களத்தூர் கல்லாறு தடுப்பணையில் குளிக்க சென்ற இனாம்அகரத்தை சேர்ந்த பத்மாவதி(44) ரேணுகா(22) சௌந்தர்யா(16) ஆகிய மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ராதிகா(24) என்பவர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர் இடுவாய், அண்ணாமலை கார்டனை சேர்ந்த, 30 பேர் திண்டுக்கல் மாவட்டம் மாம்பாறை பகுதியில் முனீஸ்வரன் கோவிலில் நடைபெற்ற கிடா வெட்டு நிகழ்ச்சிக்கு இன்று காலை, 7:00 மணிக்கு கிளம்பி சென்றனர்.
நிகழ்ச்சி முடிந்து மீண்டும் தாராபுரம் வழியாக திருப்பூர் புறப்பட்டு வரும் வழியில் தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில், மாலை, 4:30 மணியளவில் குளிக்க சென்றனர்.
அப்போது, ஒருவர் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கினார். அவரை காப்பாற்ற ஒருவர் பின் ஒருவராக, 8 பேர் சென்று நீரில் மூழ்கினர்.
அருகில் இருந்த மற்றவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக விரைந்து சென்ற தாராபுரம் தீயணைப்புத் துறையினர் சரண், ஜீவா என்ற இருவரை உயிருடன் மீட்டனர்.
பின், நீரில் மூழ்கி உயிரிழந்த அமிர்தகிருஷ்ணன்,18, சக்கரவர்மன், 18, ஸ்ரீதர், 17, ரஞ்சித், 20, யுவன்,19, மோகன், 17 என்ற, 5 கல்லூரி மாணவர், ஒரு பள்ளி மாணவர் உட்பட 6 பேரின் சடலத்தை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதில், ரஞ்சித், ஸ்ரீதர் இரட்டையர்கள். யுவன், மோகன் சகோதரர்கள். தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE