வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பாரீஸ்: தடுப்பூசி செலுத்தவில்லையென்றால் எங்கள் நாட்டில் அனுமதிக்கமாட்டோம் என பிரான்ஸ் அரசும் ஜோகாவிச்சிற்கு தடை விதித்தது
உலகின் நம்பர் 1 வீரரான செர்பியாவின் ஜோகோவிச் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கமுடியவில்லை. காரணம் அவர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை. இதனால் அந்நாட்டு குடியேற்றத்துறை அமைச்சகம் ஜோகோவிச் விசாவை ரத்து செய்து ஆஸ்திரேலியாவிற்குள் நுழையவிடாமல் தடுத்தது. இதனால் அவரது ஆஸ்திரேலிய ஓபன் கனவு தகர்ந்தது.
இந்நிலையில் பிரான்ஸ் விளையாட்டுத்துறை அமைச்சகம் இன்று (ஜன.17) வெளியிட்டுள்ள செய்தியில், ஜோகோவிச் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மட்டும் எதிர்வரும் பிரெஞ்ச் ஓபனில் அவரை பங்கேற்க அனுமதிப்போம்.எங்கள் நாட்டில் ஏற்கனவே தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் வைத்திருப்பர்களுக்கு மட்டுமே பொதுஇடங்களில் அனுமதி அளிப்பது என சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. உலகின் நம்பர் 1 வீரர் என்பதற்காக அவருக்கு எந்த வித சலுகையும் காட்டமுடியாது. இவ்வாறு பிரான்ஸ் விளையாட்டுத்றை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE