சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'தமிழக பா.ஜ.,வுக்கு என்ன தான் வேலை?'

Added : ஜன 17, 2022
Advertisement
'தமிழக பா.ஜ.,வுக்கு என்ன தான் வேலை?'மதுரையில் பா.ஜ., மருத்துவரணி மாநில தலைவர் விஜயபாண்டியன், நிருபர்களை சமீபத்தில் சந்தித்தார்.அவர் கூறுகையில், 'நீட் தேர்வு, தமிழிலும் நடத்தப்படுகிறது. நீட் மூலம் இடைத்தரகர், பண பரிமாற்றம் போன்றவை ஒழிக்கப்பட்டுள்ளன. அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதுபோன்ற நீட் தேர்வின் உண்மையான பயன்களை
பக்க வாத்தியம்


'தமிழக பா.ஜ.,வுக்கு என்ன தான் வேலை?'



மதுரையில் பா.ஜ., மருத்துவரணி மாநில தலைவர் விஜயபாண்டியன், நிருபர்களை சமீபத்தில் சந்தித்தார்.அவர் கூறுகையில், 'நீட் தேர்வு, தமிழிலும் நடத்தப்படுகிறது. நீட் மூலம் இடைத்தரகர், பண பரிமாற்றம் போன்றவை ஒழிக்கப்பட்டுள்ளன. அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதுபோன்ற நீட் தேர்வின் உண்மையான பயன்களை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க, தி.மு.க., அரசு தயங்குகிறது...' என்றார்.அங்கிருந்த இளம் நிருபர் ஒருவர், 'இந்த மக்கள் நலத்திட்டத்தை, மத்திய பா.ஜ., அரசு தான் செய்கிறது என பிரசாரம் செய்ய, தி.மு.க.,வினர் அவ்வளவு நல்லவர்களா என்ன... அப்புறம் தமிழக பா.ஜ.,வுக்கு என்ன தான் வேலை?' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X