நாடு மூச்சு விடட்டும்!
ஆர்.கோவிந்த், கோவில்பட்டி, துாத்துக்குடி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசியல்வாதிகள் அனைவருமே, 'புளுகு மூட்டைகள்' தான் என்பதை, அனைவரும் நன்றாகவே அறிவோம்.அத்தனை புளுகு மூட்டை அரசியல்வாதிகளையும், ராகுல் ஒரே ஒரு 'சிக்ஸர்' அடித்து நொறுக்கி விட்டார் போங்க!ராகுல், அப்படி என்ன சொல்லி விட்டார்?'என் அரசியல் என்பது, மகாத்மா காந்தியின் சித்தாந்தத்தை தழுவியது. பொய் சொல்லி, பொய்யான வாக்குறுதிகளை அளித்து என்னால் அரசியல் செய்ய முடியாது. இந்த தேசத்தை, காங்கிரசால் மட்டும் தான் காப்பாற்ற முடியும்' என்று அவிழ்த்து விட்டிருக்கிறார்.
மகாத்மா காந்தி மட்டும் இன்றைய தேதியில் உயிரோடு இருந்தால், கோட்சேவின் கரங்களில் இருந்த துப்பாக்கியை வாங்கி, தன்னை தானே சுட்டு தற்கொலை செய்திருப்பார்.காங்.,க்கு சொந்தமாக இருந்த, 'நேஷனல் ஹெரால்ட்' என்ற பத்திரிகையை முழுசாக முழுங்கி ஏப்பம் விட்டது தான், காந்தியின் சித்தாந்தமோ?
நோட்டு அச்சிடும் இயந்திரத்தை, 'கண்டம்ட்' என்று ஓரங்கட்டி, அதை ப.சிதம்பரத்தின் மூலமாக, பகை நாடான பாகிஸ்தானுக்கு சகாய விலைக்கு விற்றதும் கூட, மகாத்மா காந்தியின் சித்தாந்தத்தை தழுவித் தானோ?ஆட்சிப் பொறுப்பில் இல்லாத போதே, எதிரி நாடான சீனாவுடன் ஒப்பந்தங்கள் மேற்கொண்டது, காந்தியின் சித்தாந்தத்தை தழுவித் தானோ?இன்னும் இது போன்று நுாற்றுக்கணக்கான தில்லாலங்கடி வேலைகளை, சோனியாவும், அவரது மகன் ராகுலும் செய்துள்ளனர்.
ராகுலுக்கு பொய் சொல்லவே தெரியாதாம். பொய்யான வாக்குறுதிகளை அளித்து, அரசியல் செய்ய மாட்டாராம். இந்த தேசத்தை, காங்கிரசால் மட்டும் தான் காப்பாற்ற முடியுமாம்.இந்நாட்டு மக்களை முட்டாள்கள் என, அவர் நினைத்து விட்டாரா?கடைசி 10 ஆண்டுகள், காங்., நடத்திய ஆட்சியை மக்கள் மறந்து விடவில்லை!அறுபது ஆண்டுகள் முறையே கொள்ளுத் தாத்தா, பாட்டி, தகப்பன் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் நிர்வாகத்தில், காங்கிரஸ் இந்த தேசத்தை காப்பாற்றியது போதும்.
கொஞ்சம் ஒதுங்கி உட்காருங்கள்; நாடு மூச்சு விடட்டும்!
தி.மு.க., அரசின் சூட்சுமம்!
அ.ரவீந்திரன், குஞ்சன்விளை, கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க.,வினர் என்றாலே, 'விஞ்ஞான ரீதியில் ஊழல் புரிவோர்' என்ற கருத்து, மக்களிடையே வலுப்பெற்று உள்ளது.ஊழல் புரிவதற்கு வாய்ப்பு கிடைத்தால், அதை ஆளுங்கட்சியினர் மறுத்து விடுவரா என்ன?கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது, பொங்கல் பரிசாக 2,500 ரூபாய் வழங்கப்பட்டது. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், 'பொங்கல் பரிசாக 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என கோரிக்கை விடுத்திருந்தார்.
தி.மு.க.,வினர், 'நாங்கள் ஆட்சியில் இருந்தால், 10 ஆயிரம் ரூபாய் கூட கொடுப்போம்' என, 'பிலிம்' காட்டினர்.இன்று தமிழகத்தில் ஆளுங்கட்சியாக, தி.மு.க., தான் இருக்கிறது. பொங்கல் பரிசு பணம் என, 1 ரூபாய் கூட கொடுக்கவில்லை. அது ஏன் என கேள்வி கேட்டாலும், கள்ள மவுனம் சாதிக்கின்றனர், தி.மு.க.,வினர்.
எதை செய்தாலும் அதில் கமிஷன் வர வேண்டும் என்பது தான், தி.மு.க.,வின் விஞ்ஞான மூளையின் திட்டம். பொங்கல் பரிசாக 5,000 ரூபாய் என்ன... 10 ஆயிரம் ரூபாய் கூட தரலாம். அதனால், தி.மு.க.,வுக்கு என்ன வருமானம் கிடைக்கும்?
ஆதாயம் இல்லாமல் அரசியல் நடத்த, தி.மு.க., என்ன மக்கள் சேவை சங்கமா?அது கருணாநிதியின் குடும்ப கம்பெனி!பொங்கல் பரிசாக மளிகை பொருட்கள் கொடுத்தால் தான், பெரிய அளவில் கமிஷன் கிடைக்கும். பணத்தை நேரடியாக மக்களிடம் கொடுத்தால், ஏதும் கிடைக்காதே!
தி.மு.க., அரசின் சூட்சுமம் புரிகிறதா?ஒரு குடும்ப அட்டைக்கு, 100 ரூபாய் கமிஷன் கிடைக்கிறது என கணக்கிடுங்கள்... தமிழகத்தில் மொத்தம்கிடைத்த கமிஷன் தொகை, உங்கள் தலையை கிறுகிறுக்கச் செய்யும்.
கிலி ஏற்படுத்தும்ஆட்டோக்கள்!
வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - -மெயில்' கடிதம்: இரு மாதங்களுக்கு முன், மும்பைக்கு சென்றிருந்தேன். அங்குள்ள எல்லா ஆட்டோக்களிலும், 'மீட்டர்' பொருத்தப்பட்டு, அது சரியாக இயங்குகிறது. மீட்டர்
கட்டணத்தை விட கூடுதலாக 1 ரூபாய் கூட, ஆட்டோ ஓட்டுனர்கள் எடுத்து கொள்வதில்லைஅங்கு, பெரும்பாலும் எல்லா ஆட்டோ ஓட்டுனர்களும் ஒழுங்கு முறையை கடைபிடிக்கின்றனர். ஆட்டோவில் ஓட்டுனர் பெயர், புகைப்படம், தொலைபேசி எண், முகவரி ஆகியவை
தெளிவாக ஒட்டப்பட்டிருக்கின்றன. மேலும் பயணியர் புகார் தெரிவிக்க, காவல்துறை தொலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டு உள்ளது.மும்பையில், ஆட்டோ பயணம் நிம்மதியாக இருக்கிறது. ஆனால் சென்னையில், அதற்கு நேர்மாறாக இருக்கிறது.
ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்ததுமே, 10க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் நம்மை சூழ்ந்து கொள்வர். ஆட்டோவில் நம்மை ஏறச் சொல்லி, அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போடுவர்.குறைந்த துாரம் செல்வதற்கே, அவர்கள் கேட்கும் கட்டணம் மலைப்பாக இருக்கும். 'சவாரி வேண்டாம்' என்று சொன்னாலும், நம்மை விடாமல் பின் தொடர்வர்.சென்னையிலுள்ள ஆட்டோக்களில் பெயருக்குத் தான், 'மீட்டர்' பொருத்தப்பட்டுள்ளனவே தவிர, அவை எதுவும் வேலை செய்யாது. கட்டண வரைமுறை எதுவும் கிடையாது. அவர்கள் சொல்வது தான்
கட்டணம்.சீருடையுடன் காணப்படும் ஆட்டோ ஓட்டுனர்களை காண்பது, மிகவும் அபூர்வம். ஆட்டோ ஓட்டும் வேகத்தைப் பார்த்தால், அடி வயிற்றில் பயம் தொற்றி கொள்ளும். சில ஆட்டோ ஓட்டுனர்கள், மது போதையில் இருப்பர்.
இத்தனை அராஜகம் செய்யும் ஆட்டோ ஓட்டுனர்களை அரசோ, காவல்துறையோ கண்டு கொள்வதில்லை. அவசரத்திற்கு, வேறு வழியில்லாமல் தான் பொதுமக்கள் ஆட்டோவில் பயணிக்க வேண்டிஉள்ளது.
சென்னையில், ஆட்டோ இயக்கத்திற்கு ஒரு நெறிமுறையை ஏற்படுத்த வேண்டும். அதை அரசு செய்யுமா?
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE