ஜன., 18, 1963
நாகர்கோவிலை அடுத்த பூதப்பாண்டி என்ற கிராமத்தில், 1907 ஆக., 21ம் தேதி பிறந்தவர், ப.ஜீவானந்தம்; இயற்பெயர், சொரிமுத்து. இளம்வயதில், காந்தியின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டார். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே கவிதை, நாடகம் எழுதினார். தமிழிலக்கியம் மீது தனி ஆர்வம் கொண்டிருந்தார்.
கம்யூ., சித்தாந்தத்தை ஏற்று, பொதுவுடமை மேடைகளில் முழங்கினார். தீண்டாமைக்கு எதிராக போராடினார். பகத்சிங் எழுதிய, 'நான் ஏன் நாத்திகனானேன்?' எனும் நுாலை தமிழில் மொழி பெயர்த்தார். பல போராட்டங்களில் ஈடுபட்டு சிறை வாசம் அனுபவித்தார். கம்யூனிஸ்ட்டாக இருந்தாலும், சீனாவின் இந்திய படையெடுப்பை கடுமையாக எதிர்த்தார்.
கடந்த 1952ல், சென்னை வண்ணாரப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 'கலை இலக்கிய பெருமன்றம்' மற்றும் 'தாமரை, ஜனசக்தி' இதழ்களை துவக்கினார். தன் இறுதிக்காலம் வரை, வறுமையிலேயே வாழ்ந்தார். உடல்நலம் குன்றிய நிலையில், 1963 ஜன., 18ம் தேதி தன், 56வது வயதில் இயற்கை எய்தினார்.ப.ஜீவானந்தம் காலமான தினம் இன்று!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE