சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

சூதாட்ட 'ஆப்'களும், மது விற்பனையும் ஒன்று தான்!

Added : ஜன 17, 2022 | கருத்துகள் (2)
Advertisement
'ஆன்லைன்' சூதாட்டத்தை தடை செய்வது சாத்தியமா என்பது குறித்து வழக்கறிஞர் சரண்ராஜ்: ஆன்லைன் ரம்மி விளையாட்டை ஏற்கனவே, 2020 நவ., 21ல் பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு தடை செய்தது. அதை எதிர்த்து சில நிறுவனங்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இது திறமைகளுக்கான விளையாட்டு என்றும், சூதாட்டம் இல்லை என்றும் வாதிட்டன. தமிழக அரசின் எதிர்வாதம் வலுவாக இல்லாததால், தமிழக
சொல்கிறார்கள்

'ஆன்லைன்' சூதாட்டத்தை தடை செய்வது சாத்தியமா என்பது குறித்து வழக்கறிஞர் சரண்ராஜ்: ஆன்லைன் ரம்மி விளையாட்டை ஏற்கனவே, 2020 நவ., 21ல் பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு தடை செய்தது. அதை எதிர்த்து சில நிறுவனங்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இது திறமைகளுக்கான விளையாட்டு என்றும், சூதாட்டம் இல்லை என்றும் வாதிட்டன. தமிழக அரசின் எதிர்வாதம் வலுவாக இல்லாததால், தமிழக அரசு கொண்டு வந்துள்ள தடைச் சட்டம், அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்று கூறி, 2021 ஆக., 3ல் தீர்ப்பளித்து. உரிய விதிமுறைகளைக் கொண்டு வந்து முறைப்படுத்தும்படியும் தன் உத்தரவில் தெரிவித்தது.
மக்களின் நல்வாழ்வைக் காப்பதும், உறுதிபடுத்துவதும் தான் அரசின் கடமை.ஆன்லைன் சூதாட்டச் செயலி நிறுவனங்கள், திறமையை வெளிப்படுத்தும் விளையாட்டாகத் தான் தங்களை முன்வைக்கின்றன. இதில் திறமையாக விளையாடுவோரால் வெற்றி பெற முடிகிறது என்றும், பலரின் மரணத்துக்குக் காரணமான ஜல்லிக்கட்டு விளையாட்டையே அனுமதிக்கும்போது, இதை மட்டும் ஏன் தடுக்கின்றனர் என்றும் வாதிட்டதால் தான், தமிழக அரசு விதித்த தடை நீக்கப்பட்டது.எனவே, மீண்டும் தடையைக் கொண்டு வர வேண்டுமென்றால், இவை சூதாட்டச் செயலிகள் தான் என்பதையும், இவற்றில் உள்ள டெக்னிகல் மோசடிகளையும் தொழில்நுட்ப ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டியது தமிழக அரசின் பொறுப்பு.அதேபோல, மத்திய அரசும், மாநில அரசின் பார்வையோடு ஒத்துப் போக வேண்டும். இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கள் சூதாட்டங்களே என்பதையும், மோசடி நடக்கிறது என்பதையும் மத்திய அரசும் ஏற்றுக் கொண்டு, தன் வாதத்தை வைக்க வேண்டும்.

மேலும், நீதிமன்றமும், இந்த செயலிகளால் பணத்தை இழந்து, தற்கொலை செய்யும் பொது மக்களின் துயரை உணர்ந்து, அவ்வழக்கை அணுகும் பட்சத்தில், இந்தியா முழுமைக்கும் இச்செயலிகளை தடை செய்ய வாய்ப்புள்ளது.பொருளாதார இழப்பு, உயிரிழப்பு, சமூகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் அத்துமீறல்கள் அதிகரிப்பதில் மதுபானங்களுக்கும் பங்கிருக்கிறது. எனினும், மதுபான விற்பனைக்கு நேர வரம்பும், வயது வரம்பும் நிர்ணயித்து அரசு செயல்படுத்துவது போல், இதற்கும் வரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
18-ஜன-202216:50:10 IST Report Abuse
DVRR whats app, facebook, tweeter, linkedin, quora digest, கூட அப்படித்தான் அதையும் சுத்தமாக தடை செய்தால் இந்த மக்களின் addiction என்னும் போதை பழக்கம் நீங்கும்
Rate this:
Cancel
R Ravikumar - chennai ,இந்தியா
18-ஜன-202210:35:46 IST Report Abuse
R Ravikumar கை புண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லை. இந்த ஆன் லைன் சூதாட்டத்தில்.. நீங்கள் பணம் கட்டி தான் விளையாட வேண்டும் அல்லது உங்களை பணம் கட்ட நீங்கள் தூண்ட படுவீர்கள். ஆரம்ப கட்டத்தில் வெற்றி பெற்று பணம் கிடைத்தவுடன் ஆட்ட விதி முறைகள் மிக கடுமையாக ஆனால் உங்கள் ஆவலை தூண்டும் வகையில் இருக்கும். இதில் பணம் கட்டி தற்கொலை செய்து கொண்டவர்கள் இருக்கிறார்கள் அது நீதி மன்றம் கண்ணிற்கு தெரிய வேண்டும். நீங்கள் பணம் கட்டி விளையாட வேண்டும்.. வெற்றி பெற்றால் அதிக பணம் கிடைக்கும் என்பது குழந்தைக்கு கூட தெரியும் சூதாட்டம் என்று. இதில் இப்படி தெரியாதது போல் நடிப்பது மக்களை ஏமாற்றும் வேலை. பப் ஜீ , ப்ளூ வேல் விளையாட்டுகள் எப்படி தடை செய்யப்பட்டது? இந்த சூதாட்டத்தில் தற்கொலை நடக்கிறது , நீதிமன்றம் ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறது ? அல்லது எனது புரிதல் தவறா ? என்று தெரியவில்லை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X