நொய்டாவில் 40 மாடி இரட்டை கோபுரத்தை இடித்து தள்ள உச்சநீதிமன்றம் உத்தரவு

Updated : ஜன 17, 2022 | Added : ஜன 17, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி: உத்தர பிரதேசத்தில், விதிகளை மீறி கட்டப்பட்ட 40 மாடி இரட்டை கோபுரத்தை இடித்து தள்ளும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உத்தரபிரதேச மாநிலம் நொய்டா நகரில் 'சூப்பர்டெக்' என்ற கட்டுமானநிறுவனம் 'எமரால்டு கோர்ட்' என்ற 40 மாடி இரட்டை கோபுர குடியிருப்பை கட்டியுள்ளது. இரு கட்டடங்களில் 915 குடியிருப்புகள், 21 கடைகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் 633
நொய்டா, 40 மாடி இரட்டை கோபுரம், உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: உத்தர பிரதேசத்தில், விதிகளை மீறி கட்டப்பட்ட 40 மாடி இரட்டை கோபுரத்தை இடித்து தள்ளும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் நொய்டா நகரில் 'சூப்பர்டெக்' என்ற கட்டுமானநிறுவனம் 'எமரால்டு கோர்ட்' என்ற 40 மாடி இரட்டை கோபுர குடியிருப்பை கட்டியுள்ளது. இரு கட்டடங்களில் 915 குடியிருப்புகள், 21 கடைகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் 633 குடியிருப்புகளுக்கு சூப்பர்டெக் நிறுவனம் முன்பணம் பெற்றுள்ளது.


latest tamil news
அசல் கட்டட வரைபடத்திற்கும், கட்டடம் கட்டப்பட்டதற்கும் வித்தியாசம் உள்ளது , பொது பயன்பாட்டிற்கான நிலத்தையும் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் சூப்பர்டெக் நிறுவனம் மீது குடியிருப்போர் நலச்சங்கம் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விதிகளை மீறி கட்டப்பட்ட இரட்டை கோபுரத்தை இடிக்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து சூப்பர்டெக் நிறுவனம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

கடந்தாண்டு ஆக. 31 ல் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஒய்.வி.சந்திரசூட் தலைமையிலான அமர்வு , நொய்டா பெருநகர வளர்ச்சி ஆணையம் லஞ்சம் வாங்கி கொண்டு சட்ட விரோத மாக கட்டுமானத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அசல் வரைபடத்தை வீடு வாங்க முன்பதிவு செய்தோருக்கு தர மறுத்துள்ளது தெரிய வருகிறது. எனவே விதிகளை மீறி கட்டப்பட்ட இரட்டை கோபுரம் இடிக்கப்பட வேண்டும். அத்துடன், குடியிருப்போர் நலச்சங்கத்திற்கு ரூ. 2 கோடி , சூப்பர்டெக் எமரால்டு கோர்ட் இழப்பீடு வழங்க வேண்டும். தவறினால் சூப்பர் டெக் நிறுவன நிர்வாகிகளுக்கு சிறை தண்டனை நிச்சயம் என தீர்ப்பளித்து.
இதையடுத்து கடந்த இழப்பீடு தொகையை இன்றைக்குள் (ஜன.17) வழங்கிட உச்சநீதிமன்றம் விதித்த கெடு முடிவடைந்த நிலையில், இழப்பீடு தொகை வழங்கப்பட்டுவிட்டதாகவும் நாளைக்குள் (ஜன.18) அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு விடும் சூப்பர்டெக் நிறுவனம் தரப்பில் கூறியதைடுத்து. கட்டடத்தை இடிப்பதற்கான பணிகள் துவங்கியுள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
18-ஜன-202200:03:11 IST Report Abuse
DARMHAR Is organization called Super Tech company Ltd. or Super Bribe company unlimited.
Rate this:
Cancel
Dr SS - Chennai,இந்தியா
17-ஜன-202223:39:02 IST Report Abuse
Dr SS அனுமதி இல்லாத கட்டிடத்தை கட்டிக்கொண்டே போவதற்கு அனுமதித்த அரசு அலுவலர்களை காலை எடுத்தால்தான் இனிமேல் இவ்வாறு நடக்காது. தலை குனிய வேண்டிய நிலை என்னவென்றால் நாட்டின் தலைநகரத்திலேயே நடந்துதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X