புதுக்கோட்டை : 'நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசு சட்டப் போராட்டம் நடத்தினாலும், 'ஹைடெக்' ஆய்வகம் வாயிலாக, மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது' என பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுதொடர்பாக அந்த வட்டாரங்கள் கூறியதாவது: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஜனவரி 31-ம் தேதி வரை, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், இதை விடுமுறையாக கருதாமல் தேர்வுக்கு தயாராக வேண்டும். தமிழகத்துக்கு, 'நீட்' தேர்வு வேண்டாம் என்பது தான் முதல்வர் மற்றும் அரசின் நிலைப்பாடு.
'நீட்' தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்காக, சட்டப் போராட்டம் நடந்து கொண்டிருந்தாலும், தமிழக அரசின் சார்பில், 'ஹைடெக்' ஆய்வகம் வாயிலாக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதை விரிவுபடுத்தவும் திட்டமிட்டப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE