365 வகை உணவுகளுடன் மாப்பிள்ளைக்கு விருந்து

Added : ஜன 17, 2022 | கருத்துகள் (17)
Advertisement
விஜயவாடா : ஆந்திராவில் மகர சங்கராந்தியை முன்னிட்டு வருங்கால மாப்பிள்ளைக்கு, 365 வகை உணவுகளுடன் அளிக்கப்பட்ட பிரமாண்ட விருந்தின் புகைப்படம், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.பண்டிகைகளின் போது வீட்டு மருமகன்களை அழைத்து விருந்து மற்றும் பரிசுப் பொருட்கள் அளித்து மரியாதை செய்வது, தென் மாநில குடும்பங்களில் வழக்கமாக பின்பற்றப்படுகிறது.சமீபத்தில் ஆந்திராவில்
365 வகை உணவுகள், மாப்பிள்ளை, விருந்து

விஜயவாடா : ஆந்திராவில் மகர சங்கராந்தியை முன்னிட்டு வருங்கால மாப்பிள்ளைக்கு, 365 வகை உணவுகளுடன் அளிக்கப்பட்ட பிரமாண்ட விருந்தின் புகைப்படம், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.பண்டிகைகளின் போது வீட்டு மருமகன்களை அழைத்து விருந்து மற்றும் பரிசுப் பொருட்கள் அளித்து மரியாதை செய்வது, தென் மாநில குடும்பங்களில் வழக்கமாக பின்பற்றப்படுகிறது.

சமீபத்தில் ஆந்திராவில் அளிக்கப்பட்ட மகர சங்கராந்தி விருந்து, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டம் நரசாபுரத்தை சேர்ந்த தங்க நகை வியாபாரி வெங்கடேஸ்வர ராவ் - மாதவி தம்பதியின் மகள் குந்தவி.
இவருக்கும், சாய் கிருஷ்ணா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் திருமணம் நடக்க உள்ளது. இந்நிலையில் வருங்கால மாப்பிள்ளைக்கு மகர சங்கராந்தியை முன்னிட்டு பிரமாண்ட விருந்து அளிக்க வெங்கடேஸ்வர ராவ் - மாதவி தம்பதிமுடிவு செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், விருந்து நிகழ்ச்சி பெண் வீட்டில் நேற்று முன் தினம் நடந்தது. இதில் மாப்பிள்ளை சாய் கிருஷ்ணா, அவரது பெற்றோர் மற்றும் சில நெருங்கிய உறவினர்கள் பங்கேற்றனர். விருந்தில் 365 வகை உணவுகள்
பரிமாறப்பட்டன.

அரிசி சாதத்துடன் 30 வகை குழம்புகள், புளியோதரை, பிரியாணி, கோதாவரி மாவட்டத்தின் பாரம்பரிய இனிப்பு வகைகள் விருந்தில் இடம் பெற்றன. பழங்கள், கேக், பிஸ்கெட், குளிர் பானங்கள் என உணவு மேஜை நிரம்பி வழிந்தது. இந்த பிரமாண்ட விருந்தின் புகைப்படம், சமூக வலை
தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ
23-ஜன-202210:31:44 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN இதனால் ஜீரண கோளாறு ஏற்படும் ஜீரண கோளாறால் கொஞ்ச நாளைக்கு துணைவியை "திறம்பட" கவனித்துக்கொள்ள முடியாது
Rate this:
Cancel
Jit Onet - New York,யூ.எஸ்.ஏ
18-ஜன-202215:34:57 IST Report Abuse
Jit Onet ஏன் இந்த வறட்டு கவுரம் பெருமைகளை தேடி இவ்வாறு உடம்புக்கும் இயற்கைக்கும் கேடான பழக்கம்? அந்த பணத்தில் நாளைய ஏழைகளுக்கு உணவளித்திருக்க்கலாம், இரண்டு மாணவர்களுக்கு உதவியிருக்கலாம் எவ்வளவோ நல்லது செய்யலாமே. அந்த தர்மம் தானே இந்த மாப்பிள்ளை பெண்ணுக்கு பிற்காலத்தில் தலை காக்கும். ஆயினும், அவுங்க பணம் அவுங்க இஷ்டம். நீடுழி நலமுற வாழ்க
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
18-ஜன-202215:05:35 IST Report Abuse
sankar வீண் ஜம்பம். தற்பெருமை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X