வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்
ஆர்.கோவிந்த், கோவில்பட்டி, துாத்துக்குடி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசியல்வாதிகள் அனைவருமே, 'புளுகு மூட்டைகள்' தான் என்பதை, அனைவரும் நன்றாகவே அறிவோம்.

அத்தனை புளுகு மூட்டை அரசியல்வாதிகளையும், ராகுல் ஒரே ஒரு 'சிக்ஸர்' அடித்து நொறுக்கி விட்டார் போங்க! ராகுல், அப்படி என்ன சொல்லி விட்டார்?' என் அரசியல் என்பது, மகாத்மா காந்தியின் சித்தாந்தத்தை தழுவியது. பொய் சொல்லி, பொய்யான வாக்குறுதிகளை அளித்து என்னால் அரசியல் செய்ய முடியாது. இந்த தேசத்தை, காங்கிரசால் மட்டும் தான் காப்பாற்ற முடியும்' என்று அவிழ்த்து விட்டிருக்கிறார்.
மகாத்மா காந்தி மட்டும் இன்றைய தேதியில் உயிரோடு இருந்தால், கோட்சேவின் கரங்களில் இருந்த துப்பாக்கியை வாங்கி, தன்னை தானே சுட்டு தற்கொலை செய்திருப்பார். காங்.,க்கு சொந்தமாக இருந்த, 'நேஷனல் ஹெரால்ட்' என்ற பத்திரிகையை முழுசாக முழுங்கி ஏப்பம் விட்டது தான், காந்தியின் சித்தாந்தமோ?
நோட்டு அச்சிடும் இயந்திரத்தை, 'கண்டம்ட்' என்று ஓரங்கட்டி, அதை ப.சிதம்பரத்தின் மூலமாக, பகை நாடான பாகிஸ்தானுக்கு சகாய விலைக்கு விற்றதும் கூட, மகாத்மா காந்தியின் சித்தாந்தத்தை தழுவித் தானோ? ஆட்சிப் பொறுப்பில் இல்லாத போதே, எதிரி நாடான சீனாவுடன் ஒப்பந்தங்கள் மேற்கொண்டது, காந்தியின் சித்தாந்தத்தை தழுவித் தானோ? இன்னும் இது போன்று நுாற்றுக்கணக்கான தில்லாலங்கடி வேலைகளை, சோனியாவும், அவரது மகன் ராகுலும் செய்துள்ளனர்.

ராகுலுக்கு பொய் சொல்லவே தெரியாதாம். பொய்யான வாக்குறுதிகளை அளித்து, அரசியல் செய்ய மாட்டாராம். இந்த தேசத்தை, காங்கிரசால் மட்டும் தான் காப்பாற்ற முடியுமாம். இந்நாட்டு மக்களை முட்டாள்கள் என, அவர் நினைத்து விட்டாரா? கடைசி 10 ஆண்டுகள், காங்., நடத்திய ஆட்சியை மக்கள் மறந்து விடவில்லை!
அறுபது ஆண்டுகள் முறையே கொள்ளுத் தாத்தா, பாட்டி, தகப்பன் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் நிர்வாகத்தில், காங்கிரஸ் இந்த தேசத்தை காப்பாற்றியது போதும். கொஞ்சம் ஒதுங்கி உட்காருங்கள்; நாடு மூச்சு விடட்டும்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE