வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : நடிகர் தனுஷ் மனைவி ஐஸ்வர்யாவை விட்டு பிரிவதாக அறிவித்துள்ளார். ஐஸ்வர்யாவும் இதனை உறுதி செய்துள்ளார்.
கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இயக்குனர் கஸ்துாரி ராஜாவின் இளைய மகனான இவர், தன் 16 வயதில் நடிக்க வந்தார். 2004ல் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்தார்.

இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். பாலிவுட், ஹாலிவுட், தற்போது தெலுங்கு என ஒரே நேரத்தில் பன்மொழிகளில் நடித்து வருகிறார். நடிகராக மட்டுமின்றி, பாடகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக வலம் வரும் தனுஷ், ரஜினி நடித்த காலா படத்தையும் தயாரித்திருந்தார்.
சமீபத்தில் ரஜினி நடிக்கும் படத்தை தனுஷ் இயக்க போவதாகவும் செய்திகள் உலா வந்தன. இந்நிலையில் திருமணமாகி 18 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக தனுஷ் அறிவித்துள்ளார். தனுஷ் வெளியிட்ட அறிவிப்பில், ‛18 ஆண்டுகளாக நண்பர்களாக, துணையாக, பெற்றோர்களாக வாழ்ந்தோம்.

தற்போது நாங்கள் ஒன்றாக பிரிய உள்ளோம். எங்களை நாங்கள் புரிந்து கொள்ள இந்த பிரிவை ஏற்படுத்தியுள்ளோம். எங்களது இந்த பிரிவை ஏற்றுக் கொள்ளுங்கள்' என தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யாவும் இதே அறிவிப்பை வெளியிட்டு பிரிவை உறுதி செய்தார். ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவும் முதல் கணவரை விவாகரத்து செய்தார். சமீபத்தில் இரண்டாவது திருமணமும் செய்து கொண்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE