பொதுமக்கள் பொங்கி எழுந்ததால் மாநகராட்சி... எதிர்ப்பால் பணிந்தது! ரோட்டோர பார்க்கிங் கட்டணம் திட்டம் ரத்து| Dinamalar

பொதுமக்கள் பொங்கி எழுந்ததால் மாநகராட்சி... எதிர்ப்பால் பணிந்தது! ரோட்டோர 'பார்க்கிங்' கட்டணம் திட்டம் ரத்து

Updated : ஜன 18, 2022 | Added : ஜன 18, 2022 | கருத்துகள் (1) | |
கோவை:பொதுமக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து, கோவை நகரில், 31 ரோடுகளில், 'பார்க்கிங்' கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை ரத்து செய்வதாக, மாநகராட்சி நிர்வாகம் நேற்று அறிவித்தது.கோவை மாநகராட்சி, கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. வருவாயை அதிகரிக்கும் பொருட்டு, நகரிலுள்ள, 31 ரோடுகளில், இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த கட்டணம்
 பொதுமக்கள் பொங்கி எழுந்ததால்  மாநகராட்சி... எதிர்ப்பால் பணிந்தது! ரோட்டோர 'பார்க்கிங்' கட்டணம் திட்டம் ரத்து

கோவை:பொதுமக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து, கோவை நகரில், 31 ரோடுகளில், 'பார்க்கிங்' கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை ரத்து செய்வதாக, மாநகராட்சி நிர்வாகம் நேற்று அறிவித்தது.கோவை மாநகராட்சி, கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. வருவாயை அதிகரிக்கும் பொருட்டு, நகரிலுள்ள, 31 ரோடுகளில், இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை வகுத்து, அரசின் ஒப்புதலுக்கு மாநகராட்சி நிர்வாகம் அனுப்பியது.
இதுதொடர்பாக, 'ரோட்டில் வாகனம் நிறுத்தினால் கப்பம்; வருவாயை பெருக்க மாநகராட்சி பிளான்' என்கிற தலைப்பில், 8ம் தேதி நமது நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதில், எந்தெந்த ரோடுகள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன; இரு சக்கர வாகனத்துக்கு, 10 ரூபாய், நான்கு சக்கர வாகனத்துக்கு, 30 மற்றும், 40 ரூபாய் என, கட்டணம் நிர்ணயித்திருப்பது தொடர்பாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடும் எதிர்ப்பு
மாநகராட்சியின் இத்திட்டத்துக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பா.ஜ., தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான வானதி சீனிவாசன், மாநகராட்சி முன்னாள் வடக்கு மண்டலத் தலைவர் (மா.கம்யூ.,) பத்மநாபன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் இத்திட்டத்தைக் கைவிட வேண்டுகோள் விடுத்தனர்.
நேற்றைய நமது நாளிதழில் (ஜன., 17), 'வாகனம் நிறுத்த கட்டண வசூலுக்கு வலுக்கிறது எதிர்ப்பு; மாற்றி யோசிக்க முன் வர வேண்டும் மாநகராட்சி' என்ற தலைப்பில் மீண்டும் செய்தி வெளியிடப்பட்டது. கோவை வந்திருந்த பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கவனத்துக்கு இப்பிரச்னை சென்றது. உடனே, 'மாநகராட்சியின் செயலை கண்டித்து, 21ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, அவர் அறிவித்தார்.
இதன்பின், பிரச்னையின் ஆழத்தை உணர்ந்த, தி.மு.க., மாவட்ட பொறுப்பாளரான, அமைச்சர் செந்தில்பாலாஜி, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபாலுடன் ஆலோசித்தார். அதன்பின், திட்டத்தை ரத்து செய்வதாக, மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.திட்டம் ரத்துஇதுதொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் வெளியிட்டுள்ள அறிக்கை:கோவை மாநகராட்சிப் பகுதிகளில், வாகனப் போக்குவரத்து நிறைந்த சாலையோரப் பகுதிகளில் வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கும் பொருட்டு, 30 சாலைகள் தேர்வு செய்யப்பட்டன. அவற்றில் வாகன நிறுத்துமிடங்களை அமைக்கும் தனியார் நிறுவனங்கள் மூலமாக ஐந்து வருட காலங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தவும், வாகன நிறுத்துமிடங்களுக்கான கட்டணத்தை நிர்ணயிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
தேர்வு செய்யப்படும் வாகன நிறுத்தும் இடங்களில், இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த ஒரு மணி நேரத்துக்கும் மற்றும் மாத வாடகை கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டது. தகுதி வாய்ந்த ஒப்பந்த நிறுவனங்களிடம் விருப்பக் கேட்பு அறிக்கை பெறப்படவில்லை. எனவே, வாகன நிறுத்துமிடங்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணங்களை ஒப்பந்ததாரர் மூலமாக வசூலிக்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, கமிஷனர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரின் பரிந்துரை!
தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சமூக வலைதளத்தில், 'கோவை மாநகராட்சி பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தக் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டிருப்பது, எனது கவனத்துக்கு வந்ததும், மாநகராட்சி கமிஷனரிடம் கலந்தலோசித்து கட்டணத்தை ரத்து செய்ய பரிந்துரைத்திருந்தேன். அத்திட்டத்தை உடனடியாக ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறார்' என, தெரிவித்துள்ளார்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X