அலங்கார ஊர்தி விவகாரம் ;மத்திய அரசு விளாசல்

Updated : ஜன 18, 2022 | Added : ஜன 18, 2022 | கருத்துகள் (33) | |
Advertisement
குடியரசு தின அலங்கார ஊர்தி விவகாரம் குறித்து, மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் கூறியதாவது: ஒரு தவறான முன்னுதாரணத்தை சில மாநிலங்கள் உருவாக்கி வருகின்றன. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான நல்ல உறவு மற்றும் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக, இவர்களது கருத்துகள் உள்ளன. ஏதோ மத்திய அரசு திட்டமிட்டு அலங்கார ஊர்திகளை நீக்கியதாக பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு
  அலங்கார ஊர்தி விவகாரம் மத்திய அரசு விளாசல்

குடியரசு தின அலங்கார ஊர்தி விவகாரம் குறித்து, மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் கூறியதாவது: ஒரு தவறான முன்னுதாரணத்தை சில மாநிலங்கள் உருவாக்கி வருகின்றன. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான நல்ல உறவு மற்றும் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக, இவர்களது கருத்துகள் உள்ளன.
ஏதோ மத்திய அரசு திட்டமிட்டு அலங்கார ஊர்திகளை நீக்கியதாக பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.உண்மையில் இசை, நடனம், சிற்பம், ஓவியம் என பல துறை நிபுணர்கள் அடங்கிய குழுவே, இந்த ஊர்திகளை தேர்வு செய்கிறது. இந்த முறை மாநில அரசுகள்,
மத்திய அரசு துறைகள் சார்பில், 56 விண்ணப்பங்கள் வந்தன.


latest tamil news
கொரோனா வைரஸ் காரணமாக போதிய நேரம் இல்லாததால் 21 விண்ணப்பங்கள் மட்டுமே, தகுதியின் அடிப்படையில் நிபுணர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டன; இதில் மத்திய அரசின் பங்கு எதுவும்
கிடையாது.இதே முறையில் தான் பிரதமர் நரேந்திர மோடி அரசு அமைந்த பின், 2018, 2021 குடியரசு தின விழாக்களில், கேரளாவின் அலங்கார ஊர்தி பங்கேற்றது. தமிழகத்தின் ஊர்திகள் 2016, 2017, 2019, 2020 மற்றும் 2021ல் பங்கேற்றன.
மேற்கு வங்கத்தின் ஊர்திகளுக்கு 2016, 2017, 2019, 2021ல் அனுமதி அளிக்கப்பட்டது.தீர்ப்பதற்கு பல்வேறு பிரச்னைகள் இருக்கும் போது வெறும் அரசியலுக்காக இந்த தேவையில்லாத குற்றச்சாட்டுகளை மத்திய அரசின் மீது இந்த மாநிலங்கள் முன்
வைத்துள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
23-ஜன-202218:59:56 IST Report Abuse
madhavan rajan மாநிலத்தின் கையாலாகாத தனத்தை மறைக்க மத்திய அரசுமீது ஏதாவது குற்றச் சாட்டு சொல்வது இந்த கழகத்தின் அரை நூற்றாண்டு கொள்கை. அவ்வளவு எளிதில் கைவிட முடியாது.
Rate this:
Cancel
தமிழன் - madurai,இந்தியா
18-ஜன-202209:10:05 IST Report Abuse
தமிழன் திமுகவோட முக்கிய வேலையே இது தானே? சைடுல போராட்டம், புரட்சின்னு குறிப்பிட்ட மதத்தை சாடுவான். லாசரஸ் மாதிரி ஆள வச்சு மத வெறியை தூண்டுவான். மலைகளை ஆட்டை போடுவான். இன்னும் லிஸ்டுல பலப்பல வேலைகள் இருக்கு.
Rate this:
Cancel
S Bala - London,யுனைடெட் கிங்டம்
18-ஜன-202208:09:14 IST Report Abuse
S Bala இந்தியில் பெயர் எழுதிய வாகனம் நமக்கு என்றும் தேவையில்லை
Rate this:
18-ஜன-202209:55:56 IST Report Abuse
ஆரூர் ரங்ஆனால் ஹிந்தியில் பெயர் போட்ட😛 பொங்கல் தொகுப்பு மட்டும் வேண்டும்? அதுவும் பல்லி , ஆணி கலந்தது...
Rate this:
Bush - Allen, Texas,யூ.எஸ்.ஏ
20-ஜன-202209:23:19 IST Report Abuse
Bushரூபாய் நோட்டுல இந்தி எழுதியிருக்கு .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X