வெள்ள நிவாரண நிதி கொடுங்க! முதல்வர் கடிதம்

Added : ஜன 18, 2022 | கருத்துகள் (8)
Advertisement
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு, முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்: தமிழகத்தில், 2021ம் ஆண்டு வடகிழக்கு பருவ மழையின் போது, வரலாறு காணாத மழை பெய்தது. இதனால், சென்னை மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், வெள்ள சேதம் ஏற்பட்டது. வெள்ள நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிக்காக, மத்திய அரசிடம் 6,230 கோடி ரூபாய் நிவாரணம் கேட்கப்பட்டது. இதற்காக, மூன்று முறை தமிழக அரசு

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு, முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்: தமிழகத்தில், 2021ம் ஆண்டு வடகிழக்கு பருவ மழையின் போது, வரலாறு காணாத மழை பெய்தது.

இதனால், சென்னை மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், வெள்ள சேதம்
ஏற்பட்டது. வெள்ள நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிக்காக, மத்திய அரசிடம் 6,230 கோடி ரூபாய் நிவாரணம் கேட்கப்பட்டது. இதற்காக, மூன்று முறை தமிழக அரசு சார்பில், மத்திய அரசிடம் அறிக்கை சமர்பிக்கப்பட்டது.

இதற்கிடையே, கொரோனா மூன்றாவது அலை பரவலும் துவங்கி விட்டது. தொற்றை எதிர்த்து போராடுவதற்கான முயற்சிகளை, மாநில அரசு முழுமையாக செய்து வருகிறது. இதற்கு பெரும் நிதி தேவைப்படுகிறது.


மாநில நிதி நிலைமையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் ஊரடங்கு விதிமுறைகள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை மேலும் கூட்டுவதாக அமைந்துள்ளன.


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், பயிர் சேதம் அடைந்த விவசாயிகளுக்கும், மாநில அரசு நிதியில் இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது. எனவே, வெள்ள சேத சீரமைப்பு பணிகளுக்கு, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக நிதியை விடுவிக்க வேண்டும்.
இது, மாநில மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். தமிழகத்திற்கு நிதியுதவி கிடைக்க தாங்கள் உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RandharGuy - Kolkatta,இந்தியா
18-ஜன-202210:46:38 IST Report Abuse
RandharGuy மாநில அரசின் உரிமை.. தமிழ் நாட்டின் உரிமை.. நாம் கொடுக்கும் நம் தமிழ் நாடு கொடுக்கும் வரிப்பணத்தில் தான் பிரதமரின் சொகுசு விமானம் சொகுசு ஆடைகள் சொகுசு பங்களா.. எல்லாம் இவர்கள் டீசல் கியாஸ் பெட்ரோலில் அடித்த லூட்டதான் திருப்பி கொடுக்கிறார்கள்
Rate this:
Cancel
Nagercoil Suresh - India,இந்தியா
18-ஜன-202210:23:55 IST Report Abuse
Nagercoil Suresh வெள்ள நிவாரண நிதி விஷயத்தில் திமுக வின் அணுகுமுறை ரொம்ப மோசம், இதே நிலையில் ஆ தி மு க வாக இருந்திருந்தால் அவர்களாவது வாங்கி எடுத்திருப்பார்கள்...
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
18-ஜன-202206:12:13 IST Report Abuse
Mani . V வெள்ள நிவாரண நிதி கொடுங்க. அதை வாங்கி நாங்க மிளகுக்குப் பதில் இலவம்பஞ்சு விதை கொடுத்தது மாதிரி, ஆட்டையை போடணும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X