அடுத்தடுத்து ஏவுகணை சோதனை; பீதியை கிளப்பும் வட கொரியா

Updated : ஜன 18, 2022 | Added : ஜன 18, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
சியோல் : இந்த மாதம் அடுத்தடுத்து மூன்று முறை ஏவுகணை சோதனைகளை நடத்திய வட கொரியா, நேற்று மீண்டும் இரண்டு ஏவுகணைகளின் சோதனையை நடத்தியுள்ளது. கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த வட கொரியா இம்மாதம் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணை, ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் செல்லும் 'ஹைபர்சோனிக்' ஏவுகணை ஆகியவற்றின் சோதனைகளை நடத்தியது. மேலும், ரயிலில் இருந்து குறுகிய


சியோல் : இந்த மாதம் அடுத்தடுத்து மூன்று முறை ஏவுகணை சோதனைகளை நடத்திய வட கொரியா, நேற்று மீண்டும் இரண்டு ஏவுகணைகளின் சோதனையை நடத்தியுள்ளது.



latest tamil news



கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த வட கொரியா இம்மாதம் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணை, ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் செல்லும் 'ஹைபர்சோனிக்' ஏவுகணை ஆகியவற்றின் சோதனைகளை நடத்தியது. மேலும், ரயிலில் இருந்து குறுகிய துாரம் சென்று தாக்கும் ஏவுகணைச் சோதனையையும் நடத்தியது.


latest tamil news


இந்நிலையில் வட கொரியா நேற்று பியாங்யங் விமான நிலையம் அருகே சுனன் பகுதியில் இருந்து குறுகிய துாரம் சென்று தாக்கும் இரு ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியது. இந்த சோதனை வெற்றி பெற்றதா என்ற விபரம் வெளியாகவில்லை.வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருவதற்கு, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் கடும் கண்டம் தெரிவித்துள்ளன. வட கொரியா அணு ஆயுத தயாரிப்பை கைவிட வலியுறுத்தி அந்நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

அணு ஆயுத தயாரிப்பை முழுமையாக கைவிட்டால் தடையை நீக்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆனால் தடையை முதலில் நீக்கினால் பேச்சு நடத்த தயாராக உள்ளதாக வட கொரியா தெரிவித்து வருகிறது. இதை அமெரிக்கா ஏற்க மறுத்து விட்டது. இதனால் அமெரிக்க ஆதரவு நாடுகளான தென் கொரியா, ஜப்பானை அச்சுறுத்தும் வகையில், தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தி வருகிறது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏவுகணை தொழில்நுட்பங்களை கையாளும் வட கொரிய அதிகாரிகள் ஐந்து பேருக்கு, அமெரிக்கா கடந்த வாரம் தடை விதித்தது. இது தவிர, மேலும் இருவருக்கும், ரஷ்ய ஆயுத நிறுவனம் ஒன்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bush - Allen, Texas,யூ.எஸ்.ஏ
20-ஜன-202209:28:36 IST Report Abuse
Bush சீனா தனது தயாரிப்புக்களை வடகொரியாவிலிருந்து பரிசோதிக்கிறது ..
Rate this:
Cancel
தமிழன் - madurai,இந்தியா
18-ஜன-202209:13:11 IST Report Abuse
தமிழன் அந்த நாட்டுல சரியா கரண்ட் இல்ல, சோத்துக்கே தாளம் போடறதாவும் சொல்றாங்க. ஆனா ஏவுகணை மேலே ஏவுகணை விட்றான். எப்பிடி?
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
18-ஜன-202206:35:35 IST Report Abuse
Kasimani Baskaran சீனாவின் ஊதுகுழல்தான் வ கொரியா. சாப்பிட பணமில்லை என்பார்கள் ஆனால் தினம் நாலு ஏவுகணை சோதிப்பார்கள். கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதிக்க விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட செயற்கைக்கோள் தேவை. அது வ கொரியாவிடம் இல்லை. சீனாவின் உதவியில்லாமல் வ கொரியாவால் அது நிச்சயம் முடியாது. ஆக சீனாதான் உலகுக்கு மிரட்டல் விடுகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X