சீனாவில் பிறப்பு விகிதம் 5வது ஆண்டாக வீழ்ச்சி

Updated : ஜன 18, 2022 | Added : ஜன 18, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
பீஜிங் : சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக சரிவடைந்து வருகிறது. மேலும், 2021ல் மக்கள் தொகை ஆறு லட்சம் என்ற அளவிற்கே உயர்ந்துள்ளது.நம் அண்டை நாடான சீனாவில் 2021ம் ஆண்டு மக்கள் தொகை அறிக்கையை அந்த நாட்டின் தேசிய புள்ளிவிபரத் துறை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த 2021ல் சீனாவின் மக்கள் தொகை 141 கோடியே 26 லட்சமாக உயர்ந்துள்ளது.இது, 2020ல்

பீஜிங் : சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக சரிவடைந்து வருகிறது. மேலும், 2021ல் மக்கள் தொகை ஆறு லட்சம் என்ற அளவிற்கே உயர்ந்துள்ளது.



latest tamil news


நம் அண்டை நாடான சீனாவில் 2021ம் ஆண்டு மக்கள் தொகை அறிக்கையை அந்த நாட்டின் தேசிய புள்ளிவிபரத் துறை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த 2021ல் சீனாவின் மக்கள் தொகை 141 கோடியே 26 லட்சமாக உயர்ந்துள்ளது.

இது, 2020ல் 141 கோடியே 20 லட்சமாக இருந்தது. இதன்படி கடந்த ஒரு ஆண்டில் மக்கள் தொகை ஆறு லட்சம் அதிகரித்துள்ளது.இதே காலத்தில் குழந்தை பிறப்பு விகிதம் ஒரு கோடியே ஆறு லட்சமாக குறைந்துள்ளது. தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.'சீனாவில் பிறப்பு விகிதம் சரிந்து வருவது பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும்.


latest tamil news



வேலை செய்யும் திறன் உள்ளோர் மற்றும் ஓய்வூதியம் பெறுவோரின் விகிதாச்சாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்' என, பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். சிச்சுவான், ஜியாங்ஸி மாகாணங்கள் குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் நோக்கில் திருமணம், மகப்பேறு, குழந்தை பராமரிப்பு ஆகியவற்றுக்கு அளிக்கும் விடுப்பு நாட்களை அதிகரித்துள்ளன.

சீனாவில், கல்வி, வீட்டு வசதி உள்ளிட்டவற்றுக்கான செலவினங்கள் அதிகரித்துள்ளதால் அதிக குழந்தை பெறுவதில் மக்களுக்கு ஆர்வம் குறைந்துள்ளது. இதையடுத்து மூன்று குழந்தைகள் பெறுவோருக்கு பல சலுகைகளை சீன அரசு அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-ஜன-202211:06:33 IST Report Abuse
ஆரூர் ரங் சென்ற பத்தாண்டுகளில் இறப்பு விகிதம் கூட மிகவும் குறைந்து விட்டது. 😁 சராசரி வாழ்நாள் அதிகரித்து 65 வயதிலும் வேலைக்கு செல்லும் மன நிலையில் உள்ளனர். சீனா ஜப்பான் சிங்கப்பூரில் வீட்டுக் கடன் தீரவே 55 வயதாகி 😪விடுகிறது. அதற்குப்பின் சேமித்து எந்த வித வாழ்வு வாழ இயலும்?
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
18-ஜன-202206:32:09 IST Report Abuse
Kasimani Baskaran பல நகரங்களில் வீடுகளின் விலை சர்வதேச அளவை விட மிக மிக அதிகம். கணவனும் மனைவியும் சேர்ந்து வேலை செய்தாலும் கடனை அடைக்க திண்டாட வேண்டிய நிலை. கம்முநிசக்கொள்கைகளுடன் பொருளாதார சுபிட்சம் என்பது சீனாவைப் பொருத்தமட்டில் ஒரு மாயையே. சீனா அனுப்பிய வைரசே அவர்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் அவலத்தை இப்பொழுதுதான் காண்கிறார்கள்.
Rate this:
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
18-ஜன-202205:05:06 IST Report Abuse
Sanny சீனாவில் தான் பிறப்பு குறைவு. ஆனால் சீன அரசின் தொல்லை தாங்காமல் இன்று உலகெங்கும் சீனர்கள் குடி பெயர்ந்து பிள்ளை, பிள்ளையாக பெற்றுதள்ளுறாங்க. வெளிநாடுகளில் இருக்கு சீனர்கள் இன்று 70% மானவங்க குடும்பம் மூன்று பிள்ளைகளாவது பெற்று தள்ளியிருக்கிறாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X