புதுடில்லி : டில்லியில் நடக்கவுள்ள குடியரசு தின விழா அணிவகுப்பில் 75 போர் விமானங்கள் பங்கேற்க உள்ளன.வரும் 26ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது.

இதையொட்டி டில்லியில் மறுசீரமைக்கப்பட்டு வரும் ராஜபாதையில் பிரமாண்ட அணிவகுப்பு நடக்கவுள்ளது.இதைத் தொடர்ந்து விமானப் படை விமானங்களின் சாகச நிழ்ச்சிகளும் நடக்கவுள்ளன. இதில் பங்கேற்க இருக்கும் விமானங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

இந்திய விமானப் படையின் மூத்த அதிகாரி விங் கமாண்டர் இந்திரனில் நந்தி கூறியதாவது:குடியரசு தின விழாவின்போது ராஜபாதைக்கு மேல் இந்திய விமானப்படைக்கு சொந்தமான 75 போர் விமானங்கள் சாகசம் புரிய உள்ளன. நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை குறிக்கும் வகையில், 75 விமானங்கள் இதில் பங்கேற்க உள்ளன.
ஐந்து ரபேல் போர் விமானங்கள் மட்டுமல்லாமல், 'மிக் - 29 கே' போர் விமானமும், 'பி - 8 ஐ' ரோந்து விமானமும் இடம்பெற உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE