ரியல் எஸ்டேட் விதிகள்; மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

Updated : ஜன 18, 2022 | Added : ஜன 18, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
புதுடில்லி : ரியல் எஸ்டேட் துறையில் 'பில்டர்' மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இடையில் ஒப்பந்தம் செய்து கொள்ளும் வகையிலான விதிகள் வகுக்கப்பட வேண்டியதன் தேவை குறித்து, மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் மீண்டும் அறிவுறுத்தி உள்ளது.ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க புதிய விதிகளை வகுக்க கோரிக்கை எழுந்தது. இது

புதுடில்லி : ரியல் எஸ்டேட் துறையில் 'பில்டர்' மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இடையில் ஒப்பந்தம் செய்து கொள்ளும் வகையிலான விதிகள் வகுக்கப்பட வேண்டியதன் தேவை குறித்து, மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் மீண்டும் அறிவுறுத்தி உள்ளது.



latest tamil news



ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க புதிய விதிகளை வகுக்க கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையின் போது நீதிபதிகள் நேற்று பிறப்பித்த உத்தரவு:வீடு வாங்க நினைக்கும் நடுத்தர மக்களின் நலன் மீது எங்களுக்கு அக்கறை உள்ளது. ரியல் எஸ்டேட் துறையில் பில்டர் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இடையில் ஒப்பந்தம் செய்து கொள்ளும் வகையில் விதிகள் வகுக்கப்பட வேண்டியது அவசியம்.


latest tamil news



இது தொடர்பாக ஏற்கனவே அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய விதிகள் ஒட்டுமொத்த நாட்டிலும் அமலாக வேண்டும். எனவே, மத்திய அரசு இந்த கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-ஜன-202211:45:17 IST Report Abuse
வேங்கடசுப்பிரமணியன் மிகவும் அவசியமாகும் நியாயமான பரிந்துரை. அரசு விரைவாக செயல்பட்டால் பல கோடி மக்கள் பயன் பெற வாய்ப்பு
Rate this:
Cancel
தமிழன் - madurai,இந்தியா
18-ஜன-202209:18:09 IST Report Abuse
தமிழன் திமுக ஆட்சிக்கு வர்ரதுக்கு முன்னாடி இங்கே செண்டு மூணு லட்சம், இன்னைக்கு பதிமூணு லட்சம். இவனுங்களுக்கு விதிகள் போடுதாம் நீதி மன்றம். மதுரையில மணல் மாபியா மட்டுமில்ல, ரியல் எஸ்டேட் மாபியாவும் ஊரு பூரா இருக்கான். அதுவும் திமுக ஆட்சில செழிப்பா வளர்ந்து வாழறான்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
18-ஜன-202206:24:44 IST Report Abuse
Kasimani Baskaran இவ்வளவு நாளும் விதிமுறைகள் இல்லாமலா வீடு கட்டி விற்றார்கள்? இதை நீதித்துறை இவ்வளவு நாள் சென்றபின் கேட்பதுதான் காமடி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X