சென்னை : 'தி.மு.க., ஆட்சியில் அதிகரித்து வரும் போலீஸ் நிலைய இறப்புகள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:விடியா தி.மு.க., ஆட்சியில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததை கண்டு, மக்கள் கொதிப்படைந்து உள்ளனர்.மதுரையில் உறவினர்களுடன் வந்த இளம் பெண்ணை மிரட்டி, போலீஸ்காரர் ஒருவர் பலாத்காரம் செய்துஉள்ளார்
கல்பாக்கம் போலீஸ் நிலையத்தில் பெண் காவலர் ஒருவர், உடன் பணிபுரியும் காவலர்கள் மீது புகார் கூறி தற்கொலைக்கு முயன்றுள்ளார் விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லுாரில் போலீசார் தாக்கியதால், வியாபாரி உலகநாதன் இறந்து விட்டதாக புகார்

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துார் அருகே நீர்கோழியேந்தல் என்ற கிராமத்தைச் சேர்ந்த, ௨௧ வயதான கல்லுாரி மாணவன் மணிகண்டன், போலீஸ் விசாரணைக்குப் பின் வீட்டில் மர்மமான முறையில் இறந்ததாகப் புகார் திருத்தணியில் பொங்கல் புளியில் பல்லி இறந்து கிடந்ததை தெரிவித்த நந்தன் என்பவர் மீது வழக்கு. இதை அறிந்த அவரது மகன் பாபு என்ற குப்புசாமி தன் உயிரை மாய்த்துக் கொண்டார்
இப்போது சேலம் மாவட்டம், கருப்பூரை சேர்ந்த மாற்றுத் திறனாளி பிரபாகரன், போலீஸ் விசாரணைக்கு பின் இறந்துள்ளார். தொடர்புடைய போலீசார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரபாகரனின் குடும்பத்துக்கும், திருத்தணி குப்புசாமி குடும்பத்துக்கும் தலா ௨௫ லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு பழனிசாமி கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE