'பிரதமர் மோடியை அடித்து துன்புறுத்த முடியாது'; காங்., பிரமுகர் பேச்சு?

Updated : ஜன 18, 2022 | Added : ஜன 18, 2022 | கருத்துகள் (14)
Advertisement
மும்பை: பிரதமர் மோடியை அடித்து துன்புறுத்த முடியாது என காங்., பிரமுகர் பேசியதாக செய்தி பரவ, அதற்கு காங்., விளக்கம் அளித்துள்ளது. மகாராஷ்டிராவைச் காங்கிரஸ் மாநிலத் தலைவர் நானா பெடோல் தான் பிரதமர் மோடியை அடித்து துன்புறுத்த முடியாது என்று கூறியதாக செய்தி பரவ, உடனடியாக இந்த செய்தியை மறுத்த காங்கிரஸ் தலைமை இதற்கு விளக்கம் அளித்து மேற்கொண்டு பிரச்னை பெரிதாகாமல்


மும்பை: பிரதமர் மோடியை அடித்து துன்புறுத்த முடியாது என காங்., பிரமுகர் பேசியதாக செய்தி பரவ, அதற்கு காங்., விளக்கம் அளித்துள்ளது.



latest tamil news


மகாராஷ்டிராவைச் காங்கிரஸ் மாநிலத் தலைவர் நானா பெடோல் தான் பிரதமர் மோடியை அடித்து துன்புறுத்த முடியாது என்று கூறியதாக செய்தி பரவ, உடனடியாக இந்த செய்தியை மறுத்த காங்கிரஸ் தலைமை இதற்கு விளக்கம் அளித்து மேற்கொண்டு பிரச்னை பெரிதாகாமல் தேர்தல் நேரத்தில் தன்னை தற்காத்துக் கொண்டுள்ளது.


latest tamil news



மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா பெடோல். இவர் பாஜ.,வுக்கு எதிராக பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியது. அந்த வீடியோவில் 'நான் மோடியை அடிக்கவோ துன்புறுத்தவோ முடியாது' என்று பெடோல் பேசியிருந்தார்.


இந்த வீடியோவை பாஜ., தேசிய செய்தித் தொடர்பாளர் சேஷாத் பூனாவலா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பர்ந்திருந்தார்.

உடனடியாக இது குறித்து பெடோல் விளக்கம் அளித்தார்.

மகாராஷ்டிராவை அச்சுறுத்தி வந்த பிரபல ரவுடி மோடியை பற்றி தான் பேசியதாகவும் பிரதமர் மோடியை எந்தவகையிலும் தான் அவமதிக்கவில்லை என்றும் தெரிவித்தார். மராத்தி மொழியில் இவர் பேசிய இந்த வீடியோ பாஜக ஆதரவாளர்களின் கடும் கண்டனங்களை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மகாராஷ்டிரா காங்கிரஸ் உறுப்பினர் அப்துல், பாடில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பெடோலின் இதே கருத்தை வலியுறுத்தி கருத்து பதிவிட்டிருந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-ஜன-202215:00:22 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் அடிச்சான் பாரு பல்டி
Rate this:
Cancel
N. Srinivasan - Chennai,இந்தியா
18-ஜன-202211:22:42 IST Report Abuse
N. Srinivasan ஒரு வருடம் முன்பு தலைவர் மோடி ஊசி போட்டுக்கொள்ளும் போது தன்னுடைய தோல் தடிமனானது என்று சொன்னார். யார் என்ன வேண்டும் ஆனாலும் பேசுங்கள் எங்கள் தலைவர் பதில் பேச மாட்டார் அவருடைய ஒரே லட்சியம் இந்த தேசம் மற்றும் அதனுடைய வளர்ச்சி. மற்றவர்கள் எல்லாரும் பேச பேச அவருக்கு தான் பலம் அதிகமாகி வருகிறது
Rate this:
Cancel
abibabegum - madurai- Anna nagar-எங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம் ,இந்தியா
18-ஜன-202210:11:31 IST Report Abuse
abibabegum உங்கள் பேச்சால் நீங்கள் அழிந்து போவீர்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X