'மெட்ரோ' மின்சார ஸ்கூட்டர் பயணியர் மத்தியில் 'மவுசு'

Added : ஜன 18, 2022 | கருத்துகள் (1)
Advertisement
'மெட்ரோ' ரயில் நிலைய மின்சார ஸ்கூட்டருக்கு, பயணியர் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது.சென்னையில், மெட்ரோ ரயில் பயணியரின் வசதிக்காக, 'மினி பஸ்' வசதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன், தனியார் நிறுவனத்தால், கிண்டி, ஆலந்துார், வடபழநி மற்றும் திருமங்கலம் நிலையங்களில், 'ஹவ்டி' நிறுவனத்தின் சார்பில், மின்சார ஸ்கூட்டர் வசதி 2020ல் செய்யப்பட்டது.கொரோனா ஊரடங்கால், இவ்வசதி

'மெட்ரோ' ரயில் நிலைய மின்சார ஸ்கூட்டருக்கு, பயணியர் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது.சென்னையில், மெட்ரோ ரயில் பயணியரின் வசதிக்காக, 'மினி பஸ்' வசதி செய்யப்பட்டுள்ளது.

இத்துடன், தனியார் நிறுவனத்தால், கிண்டி, ஆலந்துார், வடபழநி மற்றும் திருமங்கலம் நிலையங்களில், 'ஹவ்டி' நிறுவனத்தின் சார்பில், மின்சார ஸ்கூட்டர் வசதி 2020ல் செய்யப்பட்டது.கொரோனா ஊரடங்கால், இவ்வசதி மூன்று முறை ரத்து செய்யப்பட்டு, அதன்பின் தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளது. கொரோனா இடைவெளியை பின்பற்றும் நோக்கில், பயணியரிடம் மின்சார ஸ்கூட்டர் வசதிக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

மொபைல் போனில் 'ஹவ்டி செயலி'யை பதிவிறக்கம் செய்து, இந்த ஸ்கூட்டர் வசதியை பயன்படுத்தலாம். 10 வினாடிக்குள் முன்பதிவு செய்துவிடலாம். மின்சார ஸ்கூட்டரில் முதல் பயணம் இலவசம். ஐந்து பயணங்களுக்கு, 50 சதவீத கட்டண சலுகை உண்டு. ௧ கி.மீ.,க்கு, 3 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.புறப்படும் நிலையம் சென்றடையும் இடம் பதிவிட வேண்டும் எந்த பைக் வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளலாம்.

ஸ்கூட்டர் எண், 'கியூ ஆர்' வசதியில், ஸ்கேன் செய்தால் போதும். முன்பதிவு விபரங்கள் முழுவதுமாக தெரிந்து கொள்ளலாம். சவாரிக்கு பின், இந்த நான்கு நிலையங்களில் எந்த நிலையத்தில் வேண்டுமென்றாலும் ஸ்கூட்டரை விட்டு செல்லலாம்.இந்த ஸ்கூட்டரில், தற்போது வரை, 8,100 பேர் பயணம் செய்துள்ளனர். விரைவில், மேலும், நான்கு மெட்ரோ நிலையங்களில், இவ்வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
-- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
18-ஜன-202206:27:44 IST Report Abuse
NicoleThomson நல்ல விஷயம் வரவேற்கிறேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X