தாயை பராமரிக்கும் சிறுமி குடும்பத்திற்கு குவியும் உதவி: தினமலர் செய்தி எதிரொலி

Updated : ஜன 18, 2022 | Added : ஜன 18, 2022 | கருத்துகள் (15)
Advertisement
தளவாய்புரம் : ராஜபாளையம் அருகே சேத்துாரில், மனநலம் பாதித்த அம்மாவை தாயை போன்று பராமரிக்கும் சிறுமி தலைப்பில் தினமலர் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, சிறுமியின் குடும்பத்திற்கு விருதுநகர் கலெக்டர் நேரில் சென்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இவர் போன்று பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து உதவிகள் வழங்கி வருகின்றனர்.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே

தளவாய்புரம் : ராஜபாளையம் அருகே சேத்துாரில், மனநலம் பாதித்த அம்மாவை தாயை போன்று பராமரிக்கும் சிறுமி தலைப்பில் தினமலர் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, சிறுமியின் குடும்பத்திற்கு விருதுநகர் கலெக்டர் நேரில் சென்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இவர் போன்று பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து உதவிகள் வழங்கி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்துாரை சேர்ந்தவர் குரு பாக்கியம் 39. கணவரால் கைவிடப்பட்டு இரண்டு குழந்தைகள் உதவியுடன் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகிறார். இவரது மகன் கட்டட வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வரும் நிலையில், மகளான 8 வயது சிறுமி தாயை கவனித்து வந்தார். இது தொடர்பான செய்தி 'தினமலர்' நாளிதழில் நேற்று படத்துடன் வெளியானது.


latest tamil newsஇதையடுத்து கலெக்டர் மேகநாத ரெட்டி, ஆர்.டி.ஓ., புஷ்பா, தாசில்தார் ராமச்சந்திரன் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள்,அரசு தலைமை மருத்துவர் சுரேஷ் தலைமையிலான மருத்துவர்கள் வீட்டிற்கு சென்றனர். குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த கலெக்டர், குரு பாக்கியத்திற்கு தேவையான மருத்துவ பரிசோதனை, சிகிச்சைகளை அரசு மருத்துவமனையில் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தார்.latest tamil news


குடும்பத்திற்கான ரேஷன் கார்டு, கணவரால் கைவிடப்பட்டோருக்கான மாத உதவித்தொகை ரூ.1000, 10ம் வகுப்பு படிக்கும் மகன் சுரேஷ் ஆன்லைனில் படிப்பதற்கான புதிய அலைபேசி ரூ. 15 ஆயிரம், வீட்டிற்கு தேவையான பாத்திர பொருட்கள், குழந்தைகள் இருவருக்கும் படிப்பதற்கான புத்தகப்பை, நோட்டுகள். மூன்று மாதத்திற்கு வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகளை வழங்கினார். இலவச வீட்டுமனை பட்டா வழங்கி, அரசு சார்பில் வீடு கட்ட தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கலெக்டர் உறுதியளித்தார்.

* ராஜபாளையம் தி.மு.க., எம்.எல்.ஏ ., தங்கபாண்டியன் சார்பில் 10 ஆயிரம் உதவி, சேத்துார் போலீசார் சார்பில் அரிசி பைகள், செட்டியார்பட்டி வரத விநாயகர் ஐயப்பன் யாத்திரை குழு சார்பாக மாதம் 10 கிலோ அரிசி என சிறு, சிறு உதவிகளை பல்வேறு தரப்பினரும் தேடி வந்து செய்து வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karthik - india,இந்தியா
20-ஜன-202205:17:02 IST Report Abuse
Karthik உங்கள் வடிவில் இறைவன்....
Rate this:
Cancel
S.PALANISAMY - COIMBATORE,இந்தியா
18-ஜன-202211:50:10 IST Report Abuse
S.PALANISAMY தெய்வம் போன்ற அந்த மாவட்ட கலெக்டரின் கருணையும் கவனிப்பும் அவரைக் கைத்தொழ செய்கிறது.இறைவன் அருளால் அவரது சந்ததியினர் நீடூடி வாழ்வர் தினமலரையும் நன்றிடன் வணங்குகிறோம் மற்ற தயாள உள்ளங்களை வணங்குகிறோம்.
Rate this:
Cancel
abibabegum - madurai- Anna nagar-எங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம் ,இந்தியா
18-ஜன-202211:16:37 IST Report Abuse
abibabegum பாரதிய ஜனதா கட்சி சார்பாக அந்த குடும்பத்திற்கு உதவிகள் செய்யப்படும் அந்த பகுதியே சேர்ந்த ஈர இதயம் கொண்ட பிஜேபி தொண்டர்கள் செய்வார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X