கொரோனாவால் வறுமைகோட்டுக்கு கீழ் தள்ளப்பட்ட 16 கோடி மக்கள்

Updated : ஜன 18, 2022 | Added : ஜன 18, 2022 | கருத்துகள் (4)
Advertisement
டாவோஸ்: கொரோனாவால் வறுமை கோட்டுக்குகீழ் தள்ளப்பட்ட 16 கோடி மக்கள் சுவிட்ஸர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெற்ற டாவோஸ் அஜெண்டா மாநாட்டில் ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல் அமைப்பு ஓர் பகீர் தகவலை வெளியிட்டது.இதன்படி கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா தாக்கம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட உலகளாவிய ஏழை மக்கள் குறித்த இந்த தகவல் இணையத்தில் வைரல்


டாவோஸ்: கொரோனாவால் வறுமை கோட்டுக்குகீழ் தள்ளப்பட்ட 16 கோடி மக்கள் சுவிட்ஸர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெற்ற டாவோஸ் அஜெண்டா மாநாட்டில் ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல் அமைப்பு ஓர் பகீர் தகவலை வெளியிட்டது.latest tamil news
இதன்படி கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா தாக்கம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட உலகளாவிய ஏழை மக்கள் குறித்த இந்த தகவல் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களில் 4 பெண்களில் ஒருவர் மரணம் அடைவதாகவும் ஒரு நாளில் 20 ஆயிரம்பேர் இதுபோல மரணம் அடைந்ததாகவும் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த மரணங்களுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. மருத்துவ வசதியின்மை, பாலினம் சார்ந்த வன்முறை, பசி பட்டினி, காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல காரணங்களால் கிட்டத்தட்ட 16 கோடி பேர் வறுமை கோட்டுக்கு கீழ் தள்ளப்பட்டுள்ளதாக கூறிய இந்த ஆய்வு, உலக செல்வந்தர்கள் குறித்த தகவலையும் வெளியிட்டது.

ஒரு வினாடிக்கு 15 ஆயிரம் அமெரிக்க டாலர் ஈட்டும் செல்வந்தர்கள் இந்த இரண்டு ஆண்டுகளில் தங்களது 99 சதவீத சொத்துக்களை இழந்தாலும் அவர்கள் செல்வந்தர்களாக இருந்திருப்பார். ஆனால் தற்போது வைரஸ் தாக்கம் காரணமாக வறுமை கோட்டுக்கு கீழ் தள்ளப்பட்ட மக்களின் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 3.1 பில்லியன் உலக குடிமக்களைக் காட்டிலும் 6 மடங்கு அதிக செல்வம் ஈடியவர்களாக உள்ளனர்.


latest tamil news
இவ்வாறு அந்த ஆய்வு முடிவு கூறுகிறது. இதன் மூலமாக உலக அளவில் கீழ் நடுத்தர மற்றும் ஏழை வர்க்கத்தை வைரஸ் தாக்கம் அதிக அளவு பாதித்துள்ளது தெளிவாகிறது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
18-ஜன-202211:39:07 IST Report Abuse
Apposthalan samlin இந்தியாவில் நூற்றி நாற்பது சதவீதம் பணக்காரர்கள் கூடி இருக்கிறார்கள். பூவர் மக்கள் ரெண்டு மடங்கு அதிகம் ஆகி இருக்கிறது. காரணம் கார்பொரேட் வரிய குறைத்து கிஸ்தி வரிய கூடினால்
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
18-ஜன-202209:12:59 IST Report Abuse
Sampath Kumar பதினாறு கோடி தானா ? அநியாயத்துக்கு புளுக கூடாது வாய் புளுத்துப்போகும் யார் இந்த புலி விவரத்தை தந்தது நிவஹம் இதில் உண்மை இல்லை மனசாட்சியே இல்லாத செய்தி மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள்
Rate this:
Cancel
Godyes - Chennai,இந்தியா
18-ஜன-202209:12:51 IST Report Abuse
Godyes இந்த வறுமைக்கோடு என்ற அபாயக் குறியீடு உலகளாவிய பரிதாப நிலை. உலகில் மனிதன் தோன்றும் போதே இக்குறியீடும் அவனுடன் தோன்றி விட்டது. உலகில் எந்த நாட்டிலும் வருமைக்கோடு முழுமையாக ஒழிந்ததாக தகவல்கள் இல்லை. தமிழகத்தில் வறுமை ஏழ்மை கடிவாளத்தில் அகப்பட்டிருக்கும் மக்களை காப்பாற்ற ஜெ அம்மையார் அம்மா உணவகங்களை துவக்கினார்.இது உலகளாவிய வரவேற்பை பெற்றுள்ளது.இருப்பினும் ஏராளமான ஏழை மக்கள் இன்றளவும் தங்குமிடமின்றி தன்னை தூய்மை படுத்தும் உதவி எதுவுமின்றி துணி மணி மருத்துவ வசதி போன்ற சாதாரண அடிப்படை வசதிகளின்றி இறந்தால் எடுத்துப் போட நாதியின்றி சாலையோரங்களிலும் கோயில் வாயில்களிலும் பேருந்து நிலையங்களிலும் கேட்பாரற்ற பொது இடங்களிலும் மழை வெய்யிலில் வாடுகிறார்கள். இதை ஒரு தனிமனிதனாக பார்க்கும் போது கண்களில் நீர் கசிகிறது. இதற்கென்று நிரந்தர தேவைகளை கண்டு பிடிப்பது அவசியம். அவர்களுக்கும் வாக்குரிமை தந்துள்ள ஜன நாயக சக்தி கால தாமதம் செய்யாமல் காப்பாற்ற வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X